Home செய்திகள் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினருக்கு பேஸ் ஷீல்டு மற்றும் கிருமிநாசினிகள் வழங்கிய தன்னார்வலர்கள்.

பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினருக்கு பேஸ் ஷீல்டு மற்றும் கிருமிநாசினிகள் வழங்கிய தன்னார்வலர்கள்.

by mohan

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில்,மதுரை மாவட்டத்தில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள்,சமூக ஆர்வலர்கள்,அறக்கட்டளை வைத்திருப்பவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகிறார்கள்.இதன் ஒரு பகுதியாக மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் சார்பாக நடிகர் சௌந்தரராஜா அறிவுறுத்தலின்படி அதன் ஒருங்கிணைப்பாளர் அஷ்ரப்,தேவா ஆகியோர் சாலையோரம் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக உணவு பொட்டலங்கள் வழங்கி வந்தனர். இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர் பகுதிகளில் தளர்வுகளற்ற முழுஊரடங்கில் அயராது பணிபுரியக்கூடிய காவல்துறையினர் நலன் கருதி அனைத்து காவலர்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு 200 பேருக்கு முழு முகக்கவசம்(பேஸ் ஷீல்டு)மற்றும் கிருமிநாசினிகளை இலவசமாக வழங்கினார்கள் இதுமட்டுமல்லாது மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரடியாக சென்று மதுரை மாநகரில் பணிபுரியக்கூடிய அனைத்து காவலர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்கள். மேலும் தமிழகத்தில் ஊரடங்கு முடியும்வரை எங்களால் இயன்ற உதவிகளை தினந்தோறும் செய்வதற்கு தயாராக உள்ளோம் எனவும் உறுதியளித்தனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!