Home செய்திகள் ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் சார்பில், காஞ்சி மகாசுவாமிகளின் அனுஷ நட்சத்திர வைபவம்

ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் சார்பில், காஞ்சி மகாசுவாமிகளின் அனுஷ நட்சத்திர வைபவம்

by mohan

மதுரை ஸ்ரீகாமகோடி மடத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்தில் முத்தாய்ப்பாக எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் குரு மகிமை என்கிற தலைப்பின்கீழ் முகநூல் வாயிலாக சொற்பொழிவாற்றினார்..மகாபெரியவர் தேவாரத்தில் இடம்பெற்றுள்ள விடம் தீர்த்த பதிகத்திற்கு பொருள் கூறியுள்ளார். அந்தவகையில் ஒன்று இரண்டு மூன்று என்று பத்துவரையிலான எண்களை பட்டியலிட்டு, அந்த எண்களுக்கும் சிவபெருமானுக்குமான தொடர்பை அவர் விவரித்த விதம் அசாதாரணமானதாகும். இந்த பதிகத்தை வாசித்தால் விஷக்காய்ச்சலால் மற்றும் விஷப்பூச்சிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மருந்தாகவும் விளங்குகிறது என்பதையும் பெரியவர் விளக்கியுள்ளார். பெரியவரின் பாதுகைகள் இன்றும் நூற்றுக்கணக்கானோர் இல்லங்களில் இருந்து பூஜிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதுகைகள் பக்தர்கள் சிலருக்கு கிடைத்த விதங்கள் மெய்சிலிர்ப்பூட்டக்கூடிய ஒன்றாகும். பெரியவரின் பாதுகை ஒருவர் வீட்டில் இருப்பது என்பது அவரே நமக்கு துணையாக நம்மோடு வசிப்பது போன்றதாகும். இவ்வாறு இந்திரா சௌந்தர்ராஜன் பேசினர். அனுஷத்தின் நிமித்தம் காஞ்சிமடத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. விரைவில் நாடு முழுவதும் கொரோனா ஒழிந்து மக்கள்நலம் பெற்றிட பிரார்த்தனையும் செய்யப்பட்டது நிகழ்வுகள் அனைத்தும் முகநூல் மற்றும் யூ டியூப் வழியாக நேரலை செய்யப்பட்டது

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com