Home செய்திகள் செல்போனில் மூழ்கிய இளம் தலைமுறையினரை மீட்க உதவும் ஆஸ்சூர்டு, மதுரை இளைஞர் கண்டுபிடித்த சமுக சிந்தனை விளையாட்டு.

செல்போனில் மூழ்கிய இளம் தலைமுறையினரை மீட்க உதவும் ஆஸ்சூர்டு, மதுரை இளைஞர் கண்டுபிடித்த சமுக சிந்தனை விளையாட்டு.

by mohan

இளம் தலைமுறையினரின் பொழுதுபோக்காக தற்போது செல்போன் உபயோகத்தில் இருந்து வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் சிலர் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதுடன், அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. வளரும் இளம் தலைமுறையினர் தற்போது அதிக அளவு செல்போன் மூலம் தங்களுக்கு தேவையான கல்வி, பொது அறிவு ஆகியவற்றை இணையதளம் மூலம் கற்று தெரிந்து கொண்டாலும்,குறிப்பாக இன்றைய காலத்தில் உள்ள இளைஞர்கள் அதிக அளவில் தங்களது பொழுதுபோக்கை செல்போன் மூலம் கழித்துவருவதோடு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இன்றைய காலத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பப்ஜி, ஃப்ரீ பையர் மற்றும் ப்ளூவேல் உள்ளிட்ட மிகுந்த ஆபத்தான விளையாட்டுகளில் அதிக அளவு ஈடுபட்டு செல்போனில் மூழ்கி ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி தங்களது உயிர்களை மாய்த்துக் கொள்கின்றனர்.இதனைத் தடுக்கும் விதமாக மதுரை சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற 25 வயது விளையாட்டு விஞ்ஞானி ஆஸ்சூர்டு என்ற சமூக சிந்தனை விளையாட்டு ஒன்றை உருவாக்கி, அதில் விலங்குகள் மற்றும் மனிதர்கள் வாழ்வியல் குறித்து விளக்கும் வகையிலும்-மனித வாழ்க்கை முறைகளை எடுத்துக் கூறும் வகையில் அறிவு சார்ந்த விளையாட்டு ஒன்றை கண்டுபிடித்து குழந்தைகளுக்கு தன்னுடைய ஆளுமைத் திறனை மேம்படுத்த பயிற்றுவித்து வருகிறார்.

இதனைக் அறிந்த ஜெர்மனியை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற உளவியலாளர் ஹான்ஸ் வார்னர் ஜெஸ்மன் என்பவர் அப்துல்ரகுமான் கண்டுபிடித்த சமூக சிந்தனை விளையாட்டை ஆய்வுசெய்து பல்வேறு கல்வி நிலையங்களுக்கு பரிந்துரை செய்து வருகிறார், மேலும் அப்துல் ரகுமனிற்கு பாராட்டு கடிதத்தையும் கொடுத்துள்ளார். சில கல்வி நிலையங்கள் இந்த விளையாட்டை பாடத்திட்டத்திலும் இணைத்துள்ளனர். மதுரை மட்டும் இல்லாமல் உலக நாடுகளான மலேசியா, ஆப்பிரிக்கா நாடுகளில் அப்துல்ரகுமான் குழுவை சேர்ந்த டாக்டர் அராஃபத் என்பவர் பயிற்றுவித்து வருகிறார்.கொரானா ஊரடங்கு காலம் என்பதால் கடந்த ஒரு மாத காலமாக தன்னக்கன்குளம் பகுதியில் சிறுவர்-சிறுமிகளுக்கு, கோவில் வளாகத்தில் பயிற்றுவித்து வருகிறார். இதனை அப்பகுதி சிறுவர்கள் ஆர்வத்துடன் தங்களது பொழுது போக்கை கழித்து வருகிறது. இந்த விளையாட்டை பற்றி சிறுவர்களிடம் கேட்டதற்கு, செல்போனில் விளையாடுவதால் தங்களது வீட்டில் பெற்றோர்கள் திட்டுவதாகவும், தற்போது இந்த விளையாட்டை விளையாடுவதன் மூலம் அறிவு சார்ந்த கேள்விகள் கேட்பதுடன், நண்பர்களுடன் பேசி-பழகி மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com