தமிழகத்தில் நிலவிவரும் குளறுபடியை நிவர்த்தி செய்ய ஒரே மாதிரியான இ.பாஸ் முறையை அமல்படுத்தவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அரசுக்கு வேண்டுகோள் வைத்தார்.திருமங்கலம் தொகுதியில்கடந்த ஐந்து நாட்களாக கபசுர குடிநீர் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவதுமுதல் அலை வீசிய போது அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் முறையை அறிமுகம் செய்தார்.இதில் விண்ணப்பிப்பவர்கள் செல்ல வேண்டி இடத்திற்குரிய முகவரியுடன் அதேபோல் என்ன தேவைக்கு செல்ல வேண்டுமோ அதை அதற்குரிய ஆவணத்தை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் இதனை அந்தந்தமாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அதற்கு ஒப்புதல் வழங்குவார்கள் இதனால்மக்கள் சிரமமின்றி மக்கள் சென்றனர் அதேபோல் வெளியில்தேவையில்லாமல் செல்லுவது தடுக்கப்பட்டது
தற்போது இ பாஸ் முறைக்கு பதிலாக இ பதிவு முறையை அரசு செயல்படுத்தியுள்ளது இதன்படி வெளியில் செல்ல விரும்போர் eregistertnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து அந்த சான்றை மட்டும் வைத்துக் கொண்டால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு விதமான இ.பாஸ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது தலைநகர் சென்னையில் ஒரு காவல் நிலையில் எல்லையில் இருந்து மற்றொரு காவல் நிலைய எல்லைக்குசெல்ல வேண்டும் என்றால் இ. பதிவு வேண்டும் என்று கூறப்பட்டது.ஆகவே தமிழகத்தில் ஒரே மாதிரியான இ. பாஸ் முறையை அரசு செயல்படுத்த வேண்டும் ஏற்கனவே இருந்த இ.பாஸ் நடைமுறையை 38 வருவாய் மாவட்டங்களில் சிறப்பாக செய்யப்பட்டது இதில் வெளிநாடுகள் வெளி மாநிலங்கள் வெளி மாவட்டங்கள் ஆகியவற்றிக்கு செல்ல இந்த நடைமுறை சிறப்பாக இருந்தது
மக்களும் மிகவும் கவனத்துடன் இருந்து திருமணம் ,இறப்பு ,மருத்துவம் ,ஆகிய முக்கிய நிகழ்வுகளுக்கு உரிய ஆவணம் கொடுத்து சென்றனர் இதில் நல்ல பலன் கிடைத்தது ஆகவே அரசு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி செயல்படுத்திய இ.பாஸ் நடைமுறையை தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக செயல்படுத்த வேண்டும் அப்படி செயல்படுத்தினால் தமிழகத்தில் எந்த குளறுபடி இல்லாமல் மக்களுக்கு தெளிவான வழிகாட்டுதல் இருக்கும் என்று கூறினார்.இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், மாவட்டக் கழகப் பொருளாளர் திருப்பதி, கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், மாவட்ட ஓட்டுநர் அணி செயலாளர்அணிச் செயலாளர் ராமகிருஷ்ணன், பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணி ,மாவட்ட மீனவர் அணி செயலாளர் சரவணபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.