Home செய்திகள் மேலூர் அருகே பொதுமக்களுக்கு ஊராட்சி மன்றம் சார்பில் ஆவி பிடிக்கும் வைத்திய விழிப்புணர்வை ஏற்படுத்திய ஊராட்சி மன்ற தலைவி…

மேலூர் அருகே பொதுமக்களுக்கு ஊராட்சி மன்றம் சார்பில் ஆவி பிடிக்கும் வைத்திய விழிப்புணர்வை ஏற்படுத்திய ஊராட்சி மன்ற தலைவி…

by mohan

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோட்டநத்தம்பட்டி ஊராட்சி சார்பில் கொரோனா நோயிலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ளும் வகையில் சித்த வைத்திய முறைப்படி ஆவி பிடிக்கும் முறையை அலுவலகம் முன்பு உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் ஊராட்சி மன்ற தலைவி..கோட்டநத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பழையூர் பட்டி மேலவளசை உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

தற்பொழுது கொரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும் நிலையில் பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் கொடுத்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் ஊராட்சி மன்ற தலைவி உஷா, தற்போது தன்னுடைய அலுவலகம் முன்பு சித்த வைத்திய முறைப்படி வேப்பிலை உப்பு மஞ்சள் தூள் உள்ளிட்டவைகளை ஆவியாக்கி அதன் மூலம் நோயை ஒழிப்பது எப்படி என பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் இதன் தொடக்கமாக இன்று அந்த ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆவி பிடித்துக் கொண்டனர் இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள எளிய வழிமுறை என்று தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்களும் தங்களை தற்காத்துக் கொள்ள இந்த ஆவி பிடிக்கும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தற்போது இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட உள்ளதாக ஊராட்சி மன்ற தலைவின் கணவர் இளையராஜா தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!