Home செய்திகள் மதத்தின் பெயரால் இஸ்லாமியர் படு கொலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம் .

மதத்தின் பெயரால் இஸ்லாமியர் படு கொலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம் .

by mohan

மதத்தின் பெயரால் இஸ்லாமிய இளைஞர் படு கொலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டம் தெரிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.ஹரியானா மாநிலம், மேவாட் மாவட்டத்தை சேர்ந்த ஆசீப் கான் கடந்த ஞாயிறு இரவு அன்று காரில் சென்று கொண்டிருந்த போது சமூக விரோதி கும்பல் காரை வழி மறுத்து ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி கட்டாய படுத்தியுள்ளனர் . ஜெய் ஸ்ரீராம் சொல்ல மறுத்த ஆசிப்பை மிக கொடூரமான முறையில் படு கொலை செய்ய பட்டார் என்கிற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆசிப் கானை படுகொலை செய்த சமூக விரோதி கும்பலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது.வட மாநிலங்களில் மதத்தின் பெயரிலும், பசு பாதுகாப்பு என்ற பெயரிலும், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் மற்றும் படு கொளைகள் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமாக உள்ளன. இது போன்ற கொடூர சம்பங்கள் நடை பெறாமல் தடுக்கும் வகையில் மத்திய , மாநில அரசுகள் இது போன்ற சம்வங்களில் ஈடு படுகின்ற சமூக விரோதி கும்பலை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .ஆசிப் கானை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும், அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக தெரிவித்து கொள்கிறோம். மேலும் உயிரிழந்துள்ள ஆசிப் கான் குடும்பத்தினருக்கு இழப்பிடு ரூ 50 லட்சம் வழங்க வேண்டும் . குடும்பத்தில் ஓருவருக்கு அரசு வேலை ஹரியானா அரசு வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.எனவே : ஆசிப் கானை படு கொலை செய்து தப்பி சென்ற சமூக விரோதி கும்பலை உடனடியாக அம்மாநில காவல் துறை கைது செய்ய வேண்டும். படு கொலை செய்த சமூக விரோதிகளுக்கு சட்ட ரீதியாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஹரியானா மாநில அரசை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு இக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!