Home செய்திகள் மதுரையில் ஆதி சங்கரர் ஜயந்தி.

மதுரையில் ஆதி சங்கரர் ஜயந்தி.

by mohan

ஆதிசங்கர் ஜயந்தியை முன்னிட்டு , மதுரை பெசன்ட் ரோடில் உள்ளஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தில் காலை 7மணி முதல் ஶ்ரீ ஆதிசங்கரருக்கு ருத்ராபிஷேகம் அலங்காரம் பூஜை பக்தர்கள் பங்கேற்பின்றி உலக நன்மை கருதி நிறைவேற்றப்பட்டது. மாலை இணையதளம் வாயிலாக சின்மயாமிஷன் சுவாமி சிவயோகாநந்தா பேசியது:ஆதிசங்கருடைய உபதேசங்கள் என்றும் இன்றியமையாதது. மனிதர்களின் துயர் தீர்க்கும் மாபெரும் உபதேசங்கள். அவர் எல்லோரும் வேத தர்மங்களைப் பின்பற்றி அற வாழக்கை வாழ வேண்டும் என்றார்.வாழ்வின் உயர் தர்மங்களை தெரிந்து கொள்ள வேண்டுமெனில் மறை நூல்களை தவறாது படிக்க வேண்டும். இன்று நாம் சந்திக்கக் கூடிய இன்னல்கமறை நூல்கள் நம்முடைய மனதிற்கு மிகவும் சிக்கலான சூழ்நிலைகளில் கூட மன அமைதியை தரும் மாமருந்தாக இருக்கின்றது.எவ்வாறு நூல்கண்டானது, மரத்தின் கோணல்களை சரி செய்ய உதவுகின்றதோ அதுபோல மனக் கோணல்கள் நீங்க நல்ல நூல்கள் பயன்படுகின்றது. அவை நமக்கு வாழ்வின் உயர் பயன்களை கூறுவதோடு, இறை நம்பிக்கையையும் வளர்க்க உதவுகின்றது.இறைவன் மீதும், நம்மீதும் நாம் கொண்டுள்ள நம்பிக்கை மிக முக்கியமானது.அது நம் உள்ளத் தளர்வுகளை நீக்கும். ஆகவேதான் நல்ல விஷயங்களை கேட்பதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டும். அகன்ற கடலானது எல்லா நதிகளையும் தன்னுள் அரவணைத்து நம்மை மகிழ்விப்பது போல, நம் காதுகளும் கடல் போல் விரிந்து நல்ல விஷயங்களை தயங்காது கேட்க வேண்டும். இதனால் உள்ள நலன் மட்டுமல்ல், உடல் நலனும் சிறந்து விளங்கும். உலகம் தூய்மை பெரும்.ஏற்ப்பாடுகளை ,மடத்தின் தலைவர்.டாக்டர் டிமசுப்பிமணியன்.துணைத்தலைவர்.பாசுப்பிரமணியன்.பொருளாளர்.கேஶ்ரீகுமார்வெங்கடரமணி.ஆஸ்விந்.ஶ்ரீராம்.ஶ்ரீநிவாசன்.சங்கரன்.நாராயணி செய்திருந்தனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com