Home செய்திகள் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சப்ளை: அமைச்சர் வேண்டுகோள்.

மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சப்ளை: அமைச்சர் வேண்டுகோள்.

by mohan

மதுரையில் உள்ள மருத்துவமனைகளுக்கு இரு தனியார் ஆக்சிஜன் நிறுவனங்களின் ஆக்சிஜன் சிலிண்டர்களை சப்ளை செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார். மதுரை மாவட்டம் கப்பலூரில் உள்ள தனியார் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை தமிழக வணிகம் மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது:-மதுரை கப்பலூர் சிப்காட்டில் உள்ள அரசன் மற்றும் மேலூர் அருகே தெற்கு தெரு ஊராட்சியில் உள்ள கல்யாணி ஆகிய இரு தனியார் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களைப் பார்வையிட்டு, அவற்றின் நிர்வாகத்தினரிடம் ஆக்சிஜன் சப்ளைக்கு உதவி கேட்டுள்ளேன்.மதுரையில் உள்ள மருத்துவமனைகளுக்கு இந்த இரு நிறுவனங்களும் அதிக ஆக்சிஜன் சிலிண்டர்களை சப்ளை செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளேன். அவர்களும் சம்மதித்துள்ளார்கள்.கொரோனாவைக் கட்டுப்படுத்த பொதுமக்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். தேவையின்றி நகர்க்குள் வருவது, வாகனங்களில் ஊர் சுற்றுவது இவற்றை தவிர்த்து, சுயக் கட்டுபாட்டுடன் இருந்து, வீடுகளை விட்டு வெளியே வராமல், கொரோனாவைக் கட்டுப்படுத்தும் அரசின் பணிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். மதுரை தோப்பூர் காசநோய் மருத்துவமனை வளாகத்தில், கொரோனா சிகிச்சைக்கு என புதிதாக 500 படுக்கைகளை கூடுதலாக அமைக்கும் பணி இன்று முதல் துரிதமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம். மதுரை மாநகராட்சியில் இன்று முதல் 8 வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி துவங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com