Home செய்திகள் கொரோனவால் வணிகம் பாதிப்பு வியாபாரிகள் அவதி.

கொரோனவால் வணிகம் பாதிப்பு வியாபாரிகள் அவதி.

by mohan

கொரோனா நோய் கட்டுப்பாடுஉடன் முழு ஊரடங்கு உத்தரவு அரசு பிறப்பித்துள்ளது.இதன் காரணமாக சிறுவணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் ஊர்அடங்கால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இதில் வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலையில் வாங்கி வைத்த பொருள்கள் விற்பனை செய்ய முடியாமல் சேதம் அடைந்தது.இதனால் வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டனர். இந்நிலையில் , இருந்து தற்போது கொஞ்சம் நிலைமை மாறி வியாபாரம் தொடங்கி ஒரளவுக்கு பழைய நிலைமைக்கு மாறி வருகின்ற நிலையில் தற்போது மீண்டும் ஊரடங்கு உத்தரவால் வியாபாரிகள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.சிறு வணிகர் மீண்டும் கடன்களை வாங்கி சரக்குகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்ற நிலையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவால் வாங்கிய கடனைக் கூட அடக்க முடியாத அவல நிலையில் உள்ளனர். தமிழக அரசு சிறு வணிகர்கள் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து சிறு வணிகர் ரமேஷ் கூறியதாவது:நான் சிறு வணிகம் செய்து வருகிறேன் என்னைப் போன்ற சிலர் இதுபோன்ற சிறு வணிகம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் நாங்கள் இங்கு உள்ள கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சிறுவணிக கடன் பெற்று தொழில் நடத்தி வருகிறோம்.நாங்கள் தொழில் நடத்தக்கூடிய கடையும் வாடகை கடை,குடியிருக்க கூடிய வீடும் வாடகை வீடு.இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனாநோய் காரணமாக அரசு ஊரடங்கு பிறப்பித்தது.வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாத நிலையில் இருந்தோம் அரசு தவணைகளை ஆறு மாதம் கழித்து கட்டலாம் என்று அறிவித்தது.இதன் பேரில், கட்டுப்பாடு முடிந்தவுடன் மீண்டும் தொழிலை ஆரம்பித்து தொழில் பழைய முறையில் நடக்க ஆரம்பித்தவுடன் இதில் கிடைக்கக்கூடிய வருவாயைக் கொண்டு வீட்டுக்கு செலவும்,வீட்டு வாடகையும்,கடை வாடகை, தொழிலுக்கு வாங்கிய கடனையும் சிறுகச்சிறுக அடைத்து வந்தோம்.தற்போது கொரானா தொற்று நோய் பரவல் காரணமாக அரசு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால், வங்கிகளில் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாத அவல நிலையில் உள்ளோம்.அரசு பல் வேறு துறைக்கு கடன்களை தள்ளுபடி செய்து வருகிறது. இதில் பல்வேறு மக்கள்,பல்வேறு விவசாயத்திற்கு தள்ளுபடி பெற்றுள்ளனர்.இது சுமார் 12 ஆயிரம் கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.சிறு வணிக கடன் அதிகபட்சம் ஆயிரம் கோடி கூட இருக்காது. அரசு வியாபாரிகள் மீது கருணை உள்ளம் கொண்டு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் சிறு வியாபாரிகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்து மற்றும் வீடுவாடகை,கடைவாடகை,மின்சார கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என்று மன வேதனையுடன் கேட்டுக்கொண்டார்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com