Home செய்திகள் பட்டாசு தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் -தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

பட்டாசு தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் -தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

by mohan

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நியாயவிலை கடையில் தமிழக அரசின் கொரனா சிறப்பு நிவாரன முதல் தவணை தொகையை தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்து செய்தியாளர் சந்திப்பின் போது விருதுநகர் மாவட்டத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.உதவி தொகை மாவட்டம் முழுவதும் 5 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.ஊரடங்கு நிலையைப் பொறுத்து தொழிற்சாலைகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் எனவும் .பட்டாசு தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்ஸ்டெர்லைட் மூலமாக 40 மெட்ரிக் டன் ஆக்சிசன் நமக்கு கிடைக்கப்பெற்றது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்போது அது கிடைக்கவில்லை இரு தினங்களில் பழுது சரி செய்து உற்பத்தியை துவக்கி ஆக்சிசன் கிடைக்கப்பெறும் நடவடிக்கையில் மேற்கொண்டு வருகிறோம்.

எங்கெல்லாம் ஆக்சன் கிடைக்கப் பெறுமோ அது முழுமையாக கிடைக்க முயற்சி செய்து வருகிறோம்.நெதர்லாந்து நாட்டிலிருந்து 4 கண்டெய்னர் மூலமாக 80 மெட்ரிக் டன் வந்துள்ளது.நாளை ஜாம்ஷெட்பூர் இருந்து இரண்டு கண்டெய்னர் மூலமாக 40 மெட்ரிக் டன் வரவுள்ளது.இங்கு காலியாக உள்ள சிலிண்டர்களை திரும்பும் அனுப்பி உடனடியாக திரும்ப பெறப்படும் -ஆக்சிஜன் தட்டுப்பாடு இரண்டு நாட்களில் சரி செய்யப்படும் -ஆக்சிசன் கொண்டுவர சைனாவிலிருந்து 12 கண்டெய்னர் மூலம் வர உள்ளது.ரெம்டிசிவர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com