Home செய்திகள் தொமுச சங்கம் 108 அவசரகால ஊர்தி ஓட்டுனர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம் சார்பாக அமைச்சர்களிடம் கோரிக்கை மனு

தொமுச சங்கம் 108 அவசரகால ஊர்தி ஓட்டுனர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம் சார்பாக அமைச்சர்களிடம் கோரிக்கை மனு

by mohan

தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொமுச பேரவையின் சார்பில் இன்று மதுரை மாவட்டத்திற்கு கொரோனோ சிகிச்சைக்கான நடவடிக்கைகள் பார்வையிட வந்திருந்த சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கோ.தளபதி ஆகியோர்கள் முன்னிலையில் தொமுச பேரவையின் சார்பில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் நிர்வாகத்தால் பணி நீக்கம் செய்த 10 நண்பர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனவும்.சென்னை கொரோனோ பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்க வேண்டும் எனவும்மற்றும்

நமது முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பேசினோம். அமைச்சர் கொரோனோ காலம். முடியவும் தங்களது அனைத்து கோரிக்கைகள் மற்றும் வேலையிழந்த நண்பர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்கள்.மற்றும் நமது 108 தொமுச பேரவையின் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிறோம் என்றும் உறுதி கூறியுள்ளோம். இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர், மு.இருளாண்டி, மதுரை மாவட்ட தலைவர் , பன்னிகுண்டு சிவக்குமார்,மற்றும் நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட நண்பர்களும் உடனிருந்தனர்கள்.தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொமுச பேரவை சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!