Home செய்திகள் ஆக்சிசன் காலி சிலிண்டர்கள் மதுரையில் இருந்து விமானப்படை விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்படுகிறது.

ஆக்சிசன் காலி சிலிண்டர்கள் மதுரையில் இருந்து விமானப்படை விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்படுகிறது.

by mohan

16 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தற்போது ஏற்பட்டுள்ள அவசரத் தேவைக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கதுமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா மதுரை விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் திருச்சி பெல் இரும்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட காலி ஆக்ஸிஸன் டேங்குகள் சென்னை கொண்டுசெல்லப்படுகிறது.தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கரோன தொற்று இரண்டாவது அலை காரணமாக ஆக்சிசன் தட்டுப்பாடு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து திருச்சி பாரத மிகு மின் நிலையத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட 16,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு காளி ஆக்ஸிஸன் சிலிண்டர்கள் திருச்சியில் இருந்து லாரி மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.பின்னர் இவை இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் மதுரையில் இருந்து நேற்று இரவு 9.40 மணியளவில் சென்னை கொண்டு செல்லப்படுகிறது..

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com