Home செய்திகள் மதுரையில் முழு ஊரடங்கு நேரத்தில் மக்கள் நடமாட்டதை நவீன ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள் தீவிரம்.

மதுரையில் முழு ஊரடங்கு நேரத்தில் மக்கள் நடமாட்டதை நவீன ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள் தீவிரம்.

by mohan

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை பரவல் அதிவேகமாக பரவி வருகின்ற சூழலில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் 14 தினங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து அமல்ப்படுத்தி வருகிறது.தொடர்ந்து பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும், அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிவது குறித்து காவல் துறையினர் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில் மதுரை மாநகர் பகுதிகளுக்கு உட்பட்ட முக்கிய சந்திப்புகளான ஆரப்பாளையம், பெரியார் நிலையம், ஜெய்ஹிந்துபுரம், பழங்காநத்தம் ,காளவாசல், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு நேரத்தில் மக்கள் நடமாட்டத்தை குறித்து கண்காணிப்பதற்காக,அதிநவீன ட்ரோன் கேமரா மூலம் மதுரை மாநகர் காவல் ஆணையர் உத்தரவின்பேரில் தொழில்நுட்ப பிரிவு குழுவினர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர்ந்து பொதுமக்கள் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என ட்ரான் கேமராவில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவுறுத்தல் செய்தும் வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com