Home செய்திகள் அதிக கட்டணம் கேட்கும் கேஸ் டெலிவரி செய்யும் ஊழியர்கள் இந்தியன் ஆயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா.

அதிக கட்டணம் கேட்கும் கேஸ் டெலிவரி செய்யும் ஊழியர்கள் இந்தியன் ஆயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா.

by mohan

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ரவி ஏஜென்சிஸ் இந்தியன் ஆயில் கேஸ் ஏஜென்சி ஆக திருமங்கலம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சப்ளை செய்து வருகிறார்கள் தற்பொழுது கேஸ் சப்ளை செய்யும் ஊழியர்கள் கட்டாயமாக சிலிண்டருக்கு ரூபாய் 45 முதல் 50 ரூபாய் கொடுக்க வேண்டுமென வற்புறுத்துகிறார்கள் இல்லையென்றால் சிலிண்டர் கொடுப்பதில் தாமத படுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இது குறித்து உண்மை தன்மையை அறிவதற்காக (9790039996) இதில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு சம்பந்தப்பட்ட டெலிவரி செய்யும் நபருக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியபோது ஒரு சிலிண்டரின் விலை 850 ரூபாய் தான் ஏன் 900 ரூபாய் கேட்கிறார்கள் என்று கேட்டதற்கு டெலிவரி சார்ஜ் ஐம்பது ரூபாய் கட்டாயம் கொடுத்தாக வேண்டும் என தெரிவித்துள்ளார் தற்பொழுது கொரோனா தொற்று ஊரடங்கு காலங்கள் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் சம்பளம் இல்லாமல் வறுமையில் வாடி வரும் நிலையில் இது போன்று கொள்ளையடிப்பது நியாயமா என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் இதுகுறித்து இந்தியன் ஆயில் நிர்வாக நடவடிக்கை எடுக்குமா இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கேட்க முற்பட்டபோது இந்தியன் ஆயில் கேஸ் நிர்வாக அதிகாரி தொலைபேசியை எடுக்கவில்லை சம்பந்தப்பட்ட ஏஜென்சிஸ் மீது நடவடிக்கை பாயுமா??? எதிர்பார்ப்புடன் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com