Home செய்திகள் மதுரை அரசு மருத்துவமனை பெண்கள் சிகிச்சை வார்டில் எலிகள் அட்டகாசம்: நோயாளிகள் அதிர்ச்சி.

மதுரை அரசு மருத்துவமனை பெண்கள் சிகிச்சை வார்டில் எலிகள் அட்டகாசம்: நோயாளிகள் அதிர்ச்சி.

by mohan

தென் மாவட்ட மக்களுக்கும் மதுரை மாவட்ட மக்களுக்கும் முக்கிய மருத்துவமனையாக அரசு ராஜாஜி மருத்துவமனை திகழ்ந்து வருகிறது.இங்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்பொழுது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் திருவிழா போல் மருத்துவமனை நிரம்பி வழிந்த வண்ணம் இருக்கிறது.இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனை பெண்கள் பொது வார்டில் (105-வது வார்டில்) சிகிச்சை பெற்று வரும் பெண் நோயாளிகளுக்கு மத்தியில் எலிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோயாளிகளின் படுக்கைகளில் மேல் ஏறி குதித்து விளையாடி வருகிறது.தாய்மார்களுடன் பச்சிளம் குழந்தைகளும் இதே வார்டில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் எலிகள் தொல்லை ஒரு பக்கம் இருக்க கொரோனா தொல்லை மறுபக்கம் இருந்து சிகிச்சை பெற்று வருபவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறதுஇந்த வார்டில் இடநெருக்கடி காரணமாகஅருகருகே படுக்கை அமைத்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அந்த வார்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தொற்று உறுதியான நோயாளி நான்கு மணி நேரத்திற்கும் மேலாக அதே வார்டில் இருந்துள்ளார். அதன் பின்பு தான் கொரோனா சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்அனைத்து நோயாளிக்கும் தொற்று பரவி விடுமே என்பதை பற்றி கவலைப்படாமல் மருத்துவமனை நிர்வாகம் தனது தினசரி பணிகளை மட்டுமே மேற்கொண்டு வந்ததாகவும், இந்த வார்டில் பல மணி நேரம் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளி இருந்ததால் அனைவருக்கும் தோற்று பரவிவிடும் அபாயத்தில் இருந்ததாக வேதனை யுடன் தெரிவித்த நோயாளிகள் இதுகுறித்து செவிலியர்களிடமோ மருத்துவர்களிடமும் கூறினால் சிகிச்சை அளிக்காமல் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்ற பயம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கேட்டபோது.தினமும் நோயாளிகள் தின்பண்டங்கள் உணவுகளைக் கொண்டு வந்து வைக்கிறார்கள் இதனால் எலி வருகிறது. எலிகளை வார்டுக்குள் வராமல் தடுக்க எவ்வளவோ முயற்சி எடுத்தும் வந்துவிடுகிறது. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கிறோம் எனக்கூறினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com