Home செய்திகள் அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதர் சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் சாஸ்திர சம்பிரதாயப்படி நடந்தது.திருக்கல்யாணத்திற்கு பின்பு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதர் சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் சாஸ்திர சம்பிரதாயப்படி நடந்தது.திருக்கல்யாணத்திற்கு பின்பு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

by mohan

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்திலுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.அகிலாண்டேஸ்வரி மூலநாத சுவாமி திருக்கல்யாணம் நடந்தது.இந் நிகழ்ச்சியை முன்னிட்டு குமரேசன்சிவபட்டர், செந்தில் பட்டர் ஆகியோர் வேதமந்திரங்கள் ஓதி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.இதன்பின் முகக்கவசம்அணிந்து சமூகஇடைவெளியுடன் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் போலீஸ் பாதுகாப்புடன் சாமிதரிசனத்திற்கு அனுமதித்தனர். கோவில் நிர்வாகம மற்றும்,சங்கரன் உட்பட கிராம பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.அனைவருக்கும் மாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது.மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.கணேச பட்டர் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.ஒன்றியகவுன்சில் ரேகாவீரபாண்டி உள்பட பக்தர்கள் குறைவாக கலந்து கொண்டனர்.திருக்கல்யாண நிகழ்ச்சிகள் மிகஎளிமையாக நடைபெற்றது.செயல் அலுவலர் சுரேஷ்கண்ணன்,வெண்ணிலா மற்றும் கோவில் பணியாளர்கள்,உபயதாரர்கள்,கிராம பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com