Home செய்திகள் மதுரை விமான நிலைய ஊழியர்களுக்கான கரோன தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

மதுரை விமான நிலைய ஊழியர்களுக்கான கரோன தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

by mohan

 

 

மதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான கரோன தொற்று நோய் தடுப்பூசி முகாம் வலையன் குளம் ஆரம்ப சுகாதார, நிலையத்தில் போடப்பட்டது . மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அர்ஜுன் குமார் வலையங்குளம் வட்டார மருத்துவர் சிவக்குமார் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்இதில் விமான நிலைய ஊழியர்கள் சுங்க இலாகா ஊழியர்கள் தீயணைப்பு துறை மற்றும் இமிகரேஷன் துறையைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு கோவிட் ஷர்ல்டு தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.தடுப்பூசி போட்டுக் கொண்ட ஊழியர்களிடம் செவிலியர்கள் உடல் உபாதை ஏற்பட்டால் காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் மட்டுமே சாப்பிட வேண்டும் .வேறு நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் சாப்பிடக் கூடாது என்றும் குறைந்தபட்சம் 15 நாட்களுக்குள் மது அருந்தக்கூடாது கூடாது என அறிவுறுத்தினர்.மேலும் பொதுமக்கள் தங்களது ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, விவசாய அடையாள அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து அதன் மூலம் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளலாம் என சுகாதாரத் துறை சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com