Home செய்திகள் சுகாதரத் துறை அறிவுறுத்தலை மீறிஅலச்சியமாக செயல்படும் திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம்.

சுகாதரத் துறை அறிவுறுத்தலை மீறிஅலச்சியமாக செயல்படும் திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம்.

by mohan

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 18 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது இதை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதனையடுத்து பக்தர்கள் கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பாக சுகாதார துறையினர் கிருமிநாசினி கொடுத்து முக கவசம் அணிந்து வருபவர்களை மட்டுமே கோவிலினுள் செல்ல அனுமதித்தனர்.இந்நிலையில் கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பக்தர்கள் திருகல்யாண நிகழ்வை காண்பதற்கு முறையான வசதிகள் ஏதும் செய்யாமல் அலச்சியமாக செயல்பட்டதால் கோவிலினுள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முக கவசம் அணியாமலும் , சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் ஒருவருக்கு ஒருவர் முன்டியடித்தபடி சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்கனவே நாடு முழுவதும் இரண்டாம் அலை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அலச்சிய போக்கால் இரண்டாம் அலை கொரோனாவை பரப்பும் மையமாக திருப்பரங்குன்றம் மாறியது.மேலும் திருமண நிகழ்சியினை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களையும் உள்ளே அனுமதிக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதிகாரிகளின் அலட்சியத்தால் ஊழியர்கள் பக்தர்களை நெறிமுறை படுத்தாமல் விரட்டி அடித்தனர் இதனால் சாமி பார்க்க வந்த பக்தர்கள் அதிர்ச்சியுடன் பலர் வெளியேறினர்.கோயில் ஊழியர்கள், பட்டர்கள், என பலரும் கொரான விழிப்பு இன்றி முடகவசம் இல்லாமல் நிகழ்ச்சியை நடத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!