Home செய்திகள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் உதயகுமார் இருவரின் வேட்பு மனுக்களை திரும்ப பெற வேண்டும் அதிமமுக பொதுசெயலாளர் பசும்பொன்பாண்டியன் பேட்டி .

அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் உதயகுமார் இருவரின் வேட்பு மனுக்களை திரும்ப பெற வேண்டும் அதிமமுக பொதுசெயலாளர் பசும்பொன்பாண்டியன் பேட்டி .

by mohan

அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும்  உதயகுமார் இருவரின் வேட்பு மனுக்களை திரும்ப பெற வேண்டும் இல்லையென்றால் நீதிமன்றம் செல்வோம் – அதிமமுக பொதுசெயலாளர் பசும்பொன்பாண்டியன் பேட்டி அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும்  உதயகுமார் இருவரின் வேட்பு மனுக்களை திரும்ப பெற வேண்டும் இல்லையென்றால் நீதிமன்றம் செல்வோம் – அதிமமுக பொதுசெயலாளர் பசும்பொன்பாண்டியன் பேட்டிமதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமமுக பொதுசெயலாளர் பசும்பொன்பாண்டியன்,அதிமுக ஆட்சியில் உள்ள காரணத்தினால் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்காக டோக்கன் கொடுக்கப்பட்டு பணத்தை கொடுத்து வருகின்றது. அமைச்சர் செல்லூர் ராஜு வேட்புமனு தாக்கல் செய்தது தவறான கூட்டுத் தொகைகள் உள்ளது அதை சரியாகப் பார்க்காமல் தேர்தல் ஆணையம் எப்படி அவரது வேட்புமனுவை அங்கீகரிப்பது என்பது தெரியவில்லை. அமைச்சர் செல்லூர் ராஜு தான் போட்டியிடும் மேற்கு தொகுதியில் உள்ள மக்களுக்கு பணம் கொடுப்பதற்கான டோக்கனை கொடுத்து வருவதை நான் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி உள்ளேன் ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தமிழக முதல்வர் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கினார் அது சரியானதல்ல மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்துவிட்டு இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும். இதைக் குறித்து ஆகிவிடுவார் பிரச்சாரத்தில் இது தற்காலிகமானது என கூறி வருகின்ற இதனால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆர் பி உதயகுமார் மனுவிலும் பல குழப்பங்கள் உள்ளது தேர்தல் முடிந்தாலும் இந்த இருவரின் மனுக்களையும் திரும்பப் பெறக் கோரி நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்வோம் என கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com