Home செய்திகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து திமுக கூட்டணியின் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து திமுக கூட்டணியின் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

by mohan

திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் நேற்று மாலை சி பி எம் வேட்பாளர் எஸ்.கே பொன்னுத்தாயை ஆதரித்து திமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளார் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்,இந்த கூட்டத்தில் பேசிய வேட்பாளர் எஸ்.கே பொன்னுத்தாய் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் செயல்படவும்,, திருப்பரங்குன்றத்தை சுற்றுலா நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், ரயில்வே சுரங்கப்பாதை, சர்வீஸ் ரோடு, பட்டா இல்லாத மக்களுக்கு பட்டா வாங்கித்தர முய்ற்சிப்பேன், சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஒரு பைசா கூட ஊழல் செய்யாமல் மக்களுக்கு தேவையான பணிகளை செய்வேன், தீயணைப்பு நிலையம் துவக்க நடவடிக்கை எடுப்பேன் என கூறினார். பின்னர் சிறப்புரையாற்றிய சி பி எம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் அவர்கள் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா ஏன் வட்க்கு தொகுதியில் இருந்து திருப்பரங்குன்றம் வந்துள்ளார் தெரியுமா அவர் சார்ந்துள்ள கட்சி ஒரு திருட்டு கட்சி, திருட்டு அரசாங்கம், அந்த வேட்பாளர் ஒரு ஊழல்வாதி அவர் ஊழல் மூலம் கொள்ளையடித்த பணத்தை நம்பி தேர்தலில் நிற்கிறார். அவர் மதுரை மாநகரத்தை கொள்ளையடித்தவர். இந்த தொகுதி மக்கள் ஊழல்வாதி ராஜன் செல்லப்பாவிற்க்கு டாட்டா காட்ட போவது உறுதி. இந்தியாவின் விவசாயிகள் பெரும் போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள். வரலாற்றில் இதுவரை இல்லாத மோசமான ஒரு ஆட்சி மோடி தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது. கொரானா ஊரடஙகு காலத்தில் 12 கோடிக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். இந்த அரசாங்கம் எடுத்த மோசமான நடவடிக்கையால் பல லட்சம் புலம் பெயர் தொழிலாளர்கள் வீதியில் அலைந்து கொண்டிருந்தார்கள். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக லட்சக்கணக்கான கோடிகளைகடந்த மூன்று ஆண்டுகளில். 11 லட்சம் கோடி ரூபாய் என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகையாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஏழை எளியவர்களுக்கு, விதவைகளுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, மூத்த குடிமக்களுக்கு எந்த சலுகையும் வழங்கவில்லை ஆனால் விலைவாசி, பெட்ரோல், டீசல் கேஸ் விலை உயர்வு, மூலம் மக்களை கசக்கி பிளிந்துள்ளது. மத்தியில் உள்ளது ஒரு ஜேப்படி அரசு மாநிலத்தில் உள்ளது ஒரு தலையாட்டி பொம்மை அரசு, தமிழ்நாடு ஒரு போர்க்குணம் கொண்ட உரிமைகளை போராடி பெறும் மக்கள் வாழும் நாடு ஆனால். ஈ பி எஸ் மற்றும் ஓ பி எஸ் என்ற இரட்டையர்கள் தமிழ்நாடு மானத்தை விற்று மத்திய அரசுக்கு சேவகம் செய்யும் ஒரு அடிமை அரசாக உள்ளது. தமிழக அரசில் உள்ள 3.50 லட்சம் பணிகளை ஏன் நிரப்பவில்லை. இந்தியாவில் எந்த தொழிற்சாலையும் ஒழுங்காக நடைபெற வில்லை ஆனால் மோடியும் அமித்ஷாவும் கூறும் பொய் தொழிற்சாலை மட்டும் நன்றாக நடைபெற்று கொண்டிருக்கிறது. முருகனின்வேல் யாத்திரை தேவையில்லை வேலை கொடுங்கள் என கேட்கிறோம். மோடியின் ஆட்சிஇந்த கூட்டத்தில் மதுக்கூர் ராமலிங்கம் , விஜய ராஜன் மதுரை மாநகர் சிபிஐ மாவட்ட செயலாளர் விஜயராஜன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாண்டியன்,மதிமுக மாநில கொள்கை பரப்பு செயலாளர் அழகுசுந்தரம், ஆதி தமிழர் கட்சி விடுதலை வீரன்,தமிழ் புலிகள் கட்சி துர்கா, தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாலாஜி, உசிலை சிவா, கிருஷ்ணபாண்டி, சி பி ஐ காளிதாஸ், விசிக இன்குலாப், ம.ம.க நூருல் ஹக் ,ஆதித்தமிழர் பேரவை செல்வம்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அப்துல் காதர் ஆலிம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!