Home செய்திகள் வாக்காளர் அடையாள அட்டையை ஆண் புகைப்படத்திற்க்கு பதிலாக பெண்ணின் புகைப்படம் இடம்பெற்றதால் சர்ச்சை .

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட தலைவிரிச்சான் சந்தில் வசித்து வரும் சின்னதம்பி என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட வாக்காளர் சேர்க்கை முகாமில் வாக்காளர் அடையாள அட்டை வேண்டி பதிவு செய்திருந்தார்.இந்த நிலையில் அவருக்கு இன்று தபால் மூலம் வாக்காளர் அடையாள அட்டை அவரது இல்லத்திற்கு வந்துள்ளது. தபாலை பிரித்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார், அதாவது அவரது வாக்காளர் அடையாள அட்டையில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக வேறு ஒரு பெண்ணின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.தற்போது வாக்காளர் அடையாள அட்டையில் எனது புகைப்படத்திற்கு பிறகு பெண்ணின் புகைப்படம் இடபெற்றுள்ளதால் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறான தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் தவறுகளால் 100 சதவீத வாக்குப்பதிவு எவ்வாறான சாத்தியம் என்று கேள்வி எழுகிறது என்று கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com