Home செய்திகள் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவிற்க்கு ஆதரவாக அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்கள், காளை வளர்ப்போர் தங்கள் மாடுகளுடன் வரவேற்பளித்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதிநடைபெற உள்ளது. இதில் அதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் அமமுக மக்கள் நீதி மையம் நாம் தமிழர் மை இந்தியா உள்ளிட்ட கட்சிகள் களத்தில் போட்டியிடுகின்றனர் இந்நிலையில் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா அவருக்கு ஆதரவாக அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் மற்றும் ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்கள் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை வரவேற்கும் விதமாக தங்கள் மாடுகளுடன் வந்து வரவேற்பளித்தனர்.தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடையை நீக்கிய அதிமுக அரசுக்கு நன்றி கூறும் முகமாக வரவேற்பதாக மாடு வளர்ப்போர் மற்றும் காளை வளர்ப்போர் கூறினார்.[ நிகழ்ச்சியில் பேசிய ராஜன்செல்லப்பா எம்எல்ஏ கூறுகையில் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெறும்.அவனியாபுரம் பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு நான் மதுரை மாநகர மேயராக இருந்தபோது முழு செலவையும் அரசே ஏற்கும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளேன்.அதனை தொடர்ந்து தற்போது வரை ஐல்லிக்கட்டு போட்டியை மதுரை மாநாகராட்சி நடத்தி வருகிறது.இதற்காக தற்போது மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை வளர்ப்போர் காளைகளுடன் வந்து வரவேற்பு அளித்தது பெருமைக்குரிய விசயமாக உள்ளது.இதற்காக மாடுபிடி வீரர்களுக்கும் காளை வளர்ப்பவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.கடந்த முறை வெற்றியை இழக்கவில்லை, திருப்பரங்குன்றம் தொகுதி எப்போதும் அதிமுகவின் கோட்டை இங்கு மீண்டும் வெற்றி பெறுவோம்.திருப்பரங்குன்றம் தொகுதி எனது சொந்த தொகுதி நான் பிறந்த ஊர் நான் படித்த பள்ளி கல்லூரி ஆகியவை உள்ளதால் அனைத்து பகுதி மக்களும் எனக்கு நன்றாக அறிமுகமானவர்கள்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com