Home செய்திகள் தேர்வு முறைகேடு; இடைத்தரகர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் இடைத்தரகராக செயல் பட்டதாக கூறி கைது செய்யப்பட்ட ரஷீத் ஜாமீன் கோரிய வழக்கில், எந்தெந்த மாநிலங்களில் நீட் தேர்வு குறித்த வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளன, வழக்கின் நிலை என்ன என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய சிபிஐ தரப்பில் கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.கேரளா மாநிலம் உன்னியாலைச் சேர்ந்த ரஷீத் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ” நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பல மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது என் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.இந்த வழக்கில் எனது பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்ததாக 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டாலும் உறுதியாக ஆள்மாறாட்டம் செய்தவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படுபவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் அளிக்கும் பட்சத்தில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு, நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை கட்டுப்படுகிறேன் ஆகவே ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது கடந்த விசாரணையின்போது சிபிஐ தரப்பில் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து எந்தெந்த மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அதன் நிலை என்ன என்பது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.இன்றைய வழக்கு விசாரணையின்போது சிபிஐ தரப்பில் இது சம்பந்தமான வழக்குகள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதால் மீண்டும் கால அவகாசம் கோரப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com