Home செய்திகள் டி என் டி வழங்காத அதிமுகவிற்கு ஓட்டுப் போட மாட்டோம் அமைச்சர் தொகுதியில் கிராம மக்கள் முடிவு.

டி என் டி வழங்காத அதிமுகவிற்கு ஓட்டுப் போட மாட்டோம் அமைச்சர் தொகுதியில் கிராம மக்கள் முடிவு.

by mohan

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கிண்ணிமங்கலம் கிராமத்தில் சீர் மரபினர் பத்தாண்டு காலமாக தங்களுக்கு ஒரு ஜாதி சான்றிதழ் வழங்க கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு அதிமுக எந்தவித அறிவிப்பு அறிவிக்காததால், அதிமுகவை தமிழகம் முழுவதும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, கிண்ணி மங்கலத்தைச் சேர்ந்த ரேணுகாதேவி செல்வகணேஷ் ஆகியோர் கூறியதாவது நாங்கள் பத்தாண்டு காலமாக ஒரே ஜாதி என்ற சான்றிதழ் கேட்டு போராடி வருகிறோம் ஆனால் சான்றிதழ் வழங்க அதிமுக எந்த ஒரு முயற்சியும் எடுக்காததால் வருகிற சட்டமன்ற தேர்தலில் எங்கள் கிராமத்தில் உள்ள அனைவரும் இரட்டை இலைக்கு ஓட்டு போட மாட்டோம் மேலும் மற்ற கட்சியினரையும் பிரச்சாரத்திற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்கள்சீர்மரபினர் மாநில பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் மாநில பொருளாளர் தவமணி ஆகியோர் கூறியபோது, கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக 64 ஜாதியினர் 2 கோடி மக்கள் ஒரே ஜாதியினராக வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தோம் அதிமுக அரசு எங்களை கண்டு கொள்ளவில்லை சாதாரணமாக குறைந்த அளவில் உள்ள ஒரு பிரிவினருக்கு 10% அதிமுக அரசு ஒதுக்கி உள்ளது இதனால் தூத்துக்குடி எடப்பாடி போடி உற்பட பல்வேறு தொகுதியில் சீர்மரபினர் சார்பாக வேட்பாளரை நிறுத்துவது இதன் நோக்கம் அதிமுகவுக்கு பொதுமக்கள் யாரும் ஓட்டு போடக்கூடாது என்று வலியுறுத்துவதே எங்களது நோக்கமாகும் என்று கூறினார்கள்அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையில் சீர்மரபினர் க்கு ஒரே ஜாதி சான்றிதழ் வழங்க தீர்மானிக்கப்படும் என்று கூறியுள்ளார் அவருக்கு எங்களது அமைப்பின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நாங்கள் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம்.தற்போது, திருமங்கலம் தொகுதியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் க்கு எதிராக கிண்ணி மங்கலத்தில் கிராம மக்கள் அதிமுகவிற்கு ஓட்டு போடுவதில்லை என்று முடிவு செய்துள்ளதை வரவேற்கிறோம். மேலும், மற்ற கட்சியினரையும் கிராமத்தில் அனுமதிப்பதில்லை என்ற தகவல் கிடைத்து நாங்கள் நேரடியாக அவர்களுக்கு வாழ்த்து கூற வந்திருக்கிறோம் என்று கூறினார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com