Home செய்திகள் மேலூர் அருகே புதிதாக வைக்கப்பட்ட சிலையை அகற்றுவது தொடர்பாக, காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே மோதல்.

மேலூர் அருகே புதிதாக வைக்கப்பட்ட சிலையை அகற்றுவது தொடர்பாக, காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே மோதல்.

by mohan

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வெள்ளாப்பட்டி புதூர் மந்தைதிடல் அருகே அனுமதியின்றி 5 அடி உயரம் கொண்ட சிமெண்டால் செய்யப்பட்ட ஒரு அமைப்பை சார்ந்த நபர்கள் சிலை வைக்கப்பட்ட நிலையில், இதை அகற்றுவது தொடர்பாக காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மீது பொதுமக்கள் கற்கள் மற்றும் கம்புகளை கொண்டு தாக்குதல்,இதில் காவல்துறை உதவி ஆய்வாளர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ஓட்டுனர் சதுரகிரி மற்றும் மருத்துவ உதவியாளர் கார்த்திகை வள்ளி காவலர்கள் என 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், காவல்துறை வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது.இதனால் இப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிப்பு…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com