Home செய்திகள் மதுரை வடக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டடு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த பாஜகவினர் – Dr சரவணன் MLA பேச்சு.

மதுரை வடக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டடு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த பாஜகவினர் – Dr சரவணன் MLA பேச்சு.

by mohan

பாஜகவில் இணைந்த திருப்பரங்குன்றம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ டாக்டர். சரவணன் தற்போது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு. .தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறியபோது:இன்று காலை பாஜக மாநில தலைவர் தலைமையில் பாஜகவில் இணைந்து எனக்கு மதியமே சர்ப்ரைஸ் கிப்ட் ஆக மதுரை வடக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து பின்னர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார்.திமுகவில் எம்எல்ஏவாக இருந்தவர்கள் எல்லோருக்கும் வேட்பாளர் அறிவித்த நிலையில் எனக்கு ஒதுக்காததை மதுரையில் உள்ள மாவட்டச் செயலாளர்களின் சூழ்ச்சியாக தான் நான் பார்க்கிறேன் என தெரிவித்தார்.நான் அடிப்படையில் மருத்துவர், சமூக சேவகர் மக்களுக்கு சேவை செய்வதற்காக எனக்கு ஒரு பிளாட்பார்ம் வேண்டும் அதற்காக தற்போது பாஜகவுடன் இணைந்துள்ளேன் என்றார்.பல கட்சிகள் இருந்த நிலையில் பாஜகவில் இணைந்ததின் காரணம் குறித்த கேள்விக்குகொரோன காலகட்டத்தில் தடுப்பு மருந்தினை 9 மாதத்தில் இந்தியாவிற்கு வழங்கினார் மோடி இதனை படிக்கும் பொழுது மன மகிழ்ச்சி அடைந்தது அதனால் பாஜகவில் இணைந்து என தெரிவித்தார்.தொடர்ந்து தற்போது பாஜகவின் நான் சேர்ந்துள்ளேன் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் என் வழியில் பாஜகவில் இணைவார்கள் அது கட்டாயம் எனக் கூறினார்.திமுக 60-வது வருடம் பழமையான இயக்கம் நான் தொண்டனாக இருந்து எம்எல்ஏவாக வளர்ந்தது காரணம் திமுகதான் தற்போது பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கு எனக்கு ஒருற பிளாட்பார்ம் தேவை அதனால் தான் பாஜகவில் இணைந்தேன் என்றார்.திமுகவிற்கும் பாஜகவிற்கும் கொள்கை வேறுபாடு உள்ளது இதை எவ்வாறு பார்க்கிறீர்கள் குறித்த கேள்விக்கு.திருமணத்திற்கு பத்து பொருத்தமும் பார்ப்பதில்லை அதேபோல்தான் சில பொருத்தங்கள் இருந்தால் போதும் அதை தான் நான் கொரோன தடுப்பு மருந்தை கொடுத்தது ஒருவிதம் அதனால் இணைந்தேன் என்றார்.மதுரை வடக்குத் தொகுதியில் திமுக வேட்பாளர் தளபதி எதிர்த்து போட்டியிடப் போகின்றீர்கள் இது குறித்த கேள்விக்குஎன்னை எதிர்த்து நிற்கும் திமுக வேட்பாளரை மிகப்பெரிய போட்டியாக நினைக்கவில்லை வெற்றி எனக்கே நிச்சயம் எனக் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com