Home செய்திகள் உசிலம்பட்டி அருகே அன்னபார்பட்டியில் கோவில் திருவிழாவல் வெயிலிலும் பக்தர்களுக்கு தாகம் தீர்த்த ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

உசிலம்பட்டி அருகே அன்னபார்பட்டியில் கோவில் திருவிழாவல் வெயிலிலும் பக்தர்களுக்கு தாகம் தீர்த்த ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது பாப்பாட்டி கிராமம். இந்த கிராமத்தில் புகழ்பெற்ற ஒச்சாண்டம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் மாசி மகாசிவராத்திரியில் பெட்டி எடுக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடமும் மகாசிவராத்திரியன்று உசிலம்பட்டி கருப்புகோவிலிருந்து ஐந்து பெட்டிகளை பூசாரிகள் ஊர்வலமாக எடுத்து பாப்பாட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு பூஜைகள் நடத்தியபின் மீண்டும் மூன்றாம் நாளான்று இன்று ஐந்து பெட்டிகளும் மீண்டும் கருப்புகோவிலுக்கு கொண்டுவந்தனர். அப்போது பெட்டிகள் கீரிபட்டி,வடகாட்டுப்பட்டி மற்றும் அன்னபார்பட்டி வழியாக வந்தன. அப்போது அன்னபார்பட்டி கிராமத்தில் சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித்பாண்டி தலைமையில் வெயிலில் வரும் பக்தர்களுக்கு தாகம் தீர்க்கும் விதமாக பூசாரிகள்,பக்தர்கள் என அனைவருக்கும் அவரது சொந்த செலவில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டு நீர்மோர் வழங்கப்பட்டது. அனைவருக்கும் பாகுபாடின்றி மோர் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவருக்கு பலரும் பாராட்டுகின்றனர்.

உசிலை சிந்தனியா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com