Home செய்திகள் மதுரையில் தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு… .

மதுரையில் தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு… .

by mohan

மதுரையில் தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு நடந்தது. தனியார் மயக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 15. 16 ம் தேதிகளில் அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். மத்திய அரசு மாற்றிக் கொள்ளாவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவிப்பு.வங்கி ஊழியர் சங்கத்தின் 46 வது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது. இதில்பொதுத்துறை வங்கிகள் தனிமயமாக்கு வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,வங்கிகள் பொதுத்துறையில் நீடிக்க வேண்டும்அவற்றை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும்,இது வரை நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் நலத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்த அந்த சேமிப்பு பணம் இனி தனியார் வசம் ஆகி விடும் எனவே அவர்கள் நலனுக்கு பயன்படும் என்றும் சேமிப்பின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் என்றும்பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்து மார்ச் 15, 16 ஆகிய இரு நாட்கள் அனைத்து வங்கிகளும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டன. இதில் செய்தியாளர் களிடம் பேசிய அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் வெங்கடாச்சலம் இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்துள்ளது, அதை சரி செய்ய வேண்டும் என்றால் பொதுத் துறை வங்கிகள் உதவி மிக அவசியம், மத்திய அரசு பொதுத் துறை வங்கிகளை தனியார் மயம் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளன. இது நாட்டிற்கு உகந்தது கிடையாது, பொதுமக்களின் சேமிப்பு பணம் 147 லட்சம் கோடி ரூபாய் பொதுத் துறை வங்கிகளில் உள்ளது அதற்கு பாதுகாப்பு வேண்டும் எனவும், அனைத்துறை களுக்கும் முன்னுரிமையாக கடன் கொடுப்பதற்கு பொதுத் துறை வங்கிகள் வேண்டும், இதை விடுத்து வங்கிகளை தனியார் மயப்படுத்தினால் வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிய முதலாளிகளே வங்கிகளை வாங்க நேரிடும் ஆக இந்த வங்கிகள் தனியார் மயக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 15,16ம் தேதிகளில் அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க இருப்பதாகவும், இந்த போக்கை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், மக்கள் நலன்களை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறினார். மாநாட்டை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் துவக்கி வைத்து பேசினார் . தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் மாநாட்டு சிறப்புரை ஆற்றினார் . தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் வேணுகோபால் வாழ்த்துரை வழங்கினார் . பரோடா வங்கியின் சென்னை மண்டலத் தலைவர் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com