Home செய்திகள் திருமங்கலம் தொகுதியின் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு சொந்தமாக வீட்டுமனை தேர்தல் வாக்குறுதியாக அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு

திருமங்கலம் தொகுதியின் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு சொந்தமாக வீட்டுமனை தேர்தல் வாக்குறுதியாக அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு

by mohan

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர் பி உதயகுமார் தனது முதல் பிரச்சாரத்தை மறவன்குளம் வரத வேங்கட பெருமாள் கோயில் தரிசனம் செய்து பின்னர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்பின்னர் வீடு வீடாக சென்று இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என துண்டுப் பிரசாரங்களை வழங்கி வாக்குகள் சேகரித்தார் அப்போது தொண்டர் ஒருவர் வீட்டில் அமர்ந்து பால் சாப்பிட்டு பின்னர் பிரச்சார வாகனத்தில் ஏறி மக்களிடையே பேசினார்.அப்போது தொண்டர் ஒருவரின் வீட்டில் அமர்ந்து பால் சாப்பிடும் பொழுது அவருடைய வறுமை தெரிந்தது எனக் கூறினார்.அதனால் திருமங்கலம் தொகுதியில் அம்மா வீட்டு மனை திட்டம் தொடங்கி வீடு இல்லாதவர்களுக்கு வீடு மனை சொந்த செலவில் வழங்கப்படும் என்றார்.இதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு வருவாய்த்துறை சார்பாக வீட்டுமனை வழங்கப்படும் என தெரிவித்தார்.அரசின் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்குவதோடு மட்டுமல்லாது சொந்த முயற்சியில்அம்மா வீட்டு மனை திட்டத்தின் மூலம் வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுப்போம் என்று மீண்டும் மீண்டும் தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்தார்தற்போது வரை 27 இலட்சம் குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது இந்தியாவிலேயே அம்மா அரசு இலவச வீட்டுமனை வழங்கிய அரசு அதிமுக அரசுதான் எனக் கூறினார்.தற்போது எதிர்க்கட்சிகள் பயிர் கடன் நகை கடன் தள்ளுபடி என கூறி நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை பெற்று சென்றனர். எதிர்க்கட்சியினர் அறிக்கைதான் தொடரமுடியும் ஆனால் அரசாணை வெளியீடுவது அதிமுக அரசுதான் என்றார்.ஸ்டாலின் அறிக்கை நாயகன்நமது முதலமைச்சர் அரசாணை வெளியிட்டும் நாயகன் என தெரிவித்தார்இதனைத் தொடர்ந்து திருமங்கலம் தொகுதியில் மருதுபாண்டியர் மூக்கையாத் தேவர் சிலை போல் முத்தரையர் சமுதாயத்திற்காக முத்தரையர் வெண்கல சிலைகள் அமைக்க அரசாணை பெற்று மக்களின் உணர்வுகளை வெளிக் கொண்டு வருபவர்கள் அதிமுக அரசுதான் எனக் கூறினார்.முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்கள் ஆரத்தி எடுத்து வெடி வெடித்து உற்சாகமாக வரவேற்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com