Home செய்திகள் சக்குடி கிராமத்தில் முப்புலி கோவில் மஹா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது .

சக்குடி கிராமத்தில் முப்புலி கோவில் மஹா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது .

by mohan

மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தில் முப்புலி கோவில் மஹா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த போட்டிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது .மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைதமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகரன் தலைமையில் இன்று காலை 8.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் , மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர் .ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார்800 மாடுபிடி வீரர்கள் 1000க்கும் மேற்பட்ட காளைகளை அடக்குவதற்காக உற்சாகத்துடன் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.இதில் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.முதலில் கோயில் காளைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு அவிழ்த்து விடப்பட்டு போட்டி தொடங்கப்பட்டது.இப்போட்டியை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வந்திருந்தனர்.சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பார்வையாளர்களின் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதோடு அவர்களுக்கான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை மற்றும் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டிருந்தன .ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான பரிசோதனை நடைபெற்றதுவாடிவாசலுக்கு அனுப்பப்படும் காளைகளை முறையாக மருத்துவபரிசோதனை செய்யப்பட்டு ,மது, போதைப் பொருள் போன்றவை கொடுக்கப்பட்டிருக்கிறதா என்றும், காய்ச்சல் உடல் உபாதைகள் இருக்கிறதா என்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.காயமடைந்த மாடுகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராஜ் திலகன் தலைமையில் உதவி இயக்குனர் சரவணன் மேற்பார்வையில் 70 பேர் கொண்ட கால்நடை மருத்துவ டாக்டர்கள் மற்றும் உதவியாளர்கள் கொண்டக் குழு பணியமர்த்தப்பட்டிருந்தது .காயமடைந்த மாடுபிடி வீரர்களுக்கு சிகிச்சையளிக்க டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் அடங்கிய மருத்துவக் குழு தயார் நிலையில் இருந்து காயமடைந்த வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.ஜல்லிக்கட்டு நடத்த இடத்தை சுற்றிலும் பாதுகாப்புக்காகமாவட்ட காவல்துறை எஸ்.பி., சுஜித்குமார் உத்தரவின் பேரில் ஏ.எஸ்.பி வனிதா மேற்பார்வையில் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. விஜயக்குமார் , சிலைமான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் , எஸ்.ஐ. கார்த்திக் , எஸ்.எஸ்.ஐக்கள் மார்ட்டின் வில்லியம் , பிச்சை பாண்டியன் உள்ளிட்ட மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த சுமார் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர் .வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு பொருட்களாக பி.ஆர் சேம்பர்ஸ் நிறுவனம் சார்பில் பீரோ , கட்டில் , பட்டுச்சேலை , சில்வர் அண்டா, குத்து விளக்கு , டிரெஸ்ஸிங் டேபிள் போன்ற பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com