திமுக சார்பில் பெட்ரோல் கேஸ் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து சைக்கிள் பேரணி .

சோழவந்தான் திமுக சார்பில் பெட்ரோல் டீசல் கேஸ் விலையை குறைக்க வலியுறுத்தி மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து சைக்கிள் பேரணி நடைபெற்றது சோழவந்தான் நகர திமுக செயலாளர் முனியாண்டி தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட பிரதிநிதி பேட்டை கண்ணன், ஒன்றிய பிரதிநிதி தவமணி, மகேந்திரன், முன்னிலை வகித்தனர் இதில் நிர்வாகிகள் பெரியசாமி, பிச்சைமணி, ஜெயராம், ஐஸ்பாண்டி, எம் எஸ் ராஜா, சுரேஷ், ரவி, காளீஸ்வரன், பார்த்திபன், தனசேகரன், மற்றும் நிர்வாகிகள் கழக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர், இக்கண்டன சைக்கிள் பேரணி சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு துவங்கி பல முக்கிய தெருக்கள் வழியாக கண்டன கோஷம் இட்டு சென்றது.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்