
சோழவந்தான் பிப்ரவரி 23 சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அய்யப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் வருகிற 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது இவ்விழாவில் பங்கேற்கும் காளை பிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது அனுமதிச் சீட்டு வழங்கினார்கள் மாடு பிடிக்கும் வீரர்களுக்கு அரசு விதித்திருக்கும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உயரம் எடை ரத்த அழுத்தம் மருத்துவ பரிசோதனை கொரோனா பரிசோதனை நடைபெற்று அனுமதி சீட்டு வழங்கப்பட்டது மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக மருத்துவ பரிசோதனை நடந்தது வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ் பாண்டியன் மருத்துவ அலுவலர் கோபி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முனியசாமி சுகாதார ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன் செந்தில் கருப்பையா பிரபாகரன் பொன் முத்துக்குமார் தாமோதரன் ஆகியோர் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு பரிசோதனை செய்தனர் வாடிப்பட்டி வருவாய் மண்டல துணை தாசில்தார்கள் திருநாவுக்கரசு கல்யாணசுந்தரம் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் முத்துக்குமரன் சேகரன் மணிவேல் ஜெயபிரகாஷ் முத்துராமன் சுல்தான் முத்துப்பாண்டி ராஜா பழனி செல்வமணி சுரேஷ் கார்த்தீஸ்வரி ஆகியோர் மாடுபிடி வீரர்களுக்கு அடையாள அட்டை சரிபார்த்து அவர்களுக்கு மாடு பிடிப்பதற்கான தகுதியான அடையாள சீட்டு வழங்கப்பட்டது இதுகுறித்து விழா கமிட்டி செயலாளர் புலவர் தங்கவேல் கூறியபோது அய்யப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா மூன்றாண்டுகளாக தொடர்ந்து நடத்தி வந்தோம் கொரனோ தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு நடத்த முடியவில்லை இந்த ஆண்டு அரசு சட்ட திட்டத்திற்கு உட்பட்டு விழா ஏற்பாடுகளை செய்து வருகிறோம் சுமார் 600 மாடுகள் 300 வீரர்களை எதிர்பார்த்து இருக்கிறோம் என்று கூறினார்படவிளக்கம் சோழவந்தான் அருகே ஐயப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.