மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில்டவுன்பஸ் கண்ணாடி உடைப்பு.

மதுரை விளாங்குடி ஆளவாய்நகரைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து காரியாபட்டி செல்லும் டவுன் பஸ்ஸில் கண்டக்டராக பணியாற்றுகிறார். இவர் பணியாற்றும் பஸ் பெரியாரில் நின்றபோது இருபத்தியிரண்டு வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பஸ்ஸின் பக்கவாட்டில் இருந்த கண்ணாடியை உடைத்துவிட்டு ஓடிவிட்டார்.இந்த சம்பவம் தொடர்பாக கண்டக்டர் ராஜமாணிக்கம் கொடுத்த புகாரில் திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணாடி உடைத்த வாலிபரை தேடிவருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்