ஆலங்குளத்தில் தீவிர டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது.

ஒத்த அளவுகளும் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சுகாதார குழுவினர் சார்பில் 6 ஹெல்த் இன்ஸ்பெக்டர் சுகாதார ஆய்வளர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள்.மற்றும் 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலமாக 60 பேர் பணியில் ஈடுபட்டனர்.நடமாடும் மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் முதியவர்கள், சிறுவர்கள் உட்பட 50நபர்களுக்கும் மேற்பட்டவர்கள் முகாமில் கலந்து கொண்டனர்.ஒவ்வொரு பணியாளரும் வீடு வீடாகச் சென்று ஆட்டுக்கல் ,சிரட்டை. டயர் மற்றும் கழிவுநீர் உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதா என்றும் மற்றும் பிரிட்ஜ் பின் பகுதியில்உள்ள நீர்த் தேங்கும் தொட்டியில் சுத்தமாக உள்ளதா என்றும் ஆய்வு செய்து புழுக்கள் பரவாமல் தடுக்கும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.சுகாதாரத்துறை இணை இயக்குனர் Dr. கிருஷ்ணராஜ் பணியை நேரில் ஆய்வு செய்தார். திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவர் டாக்டர் சிவகுமார் திருப்பரங்குன்றம் வட்டார சுகாதார கண்காணிப்பாளர் தங்கசாமி ஆகிபோர் ஆலங்குளம் பகுதியில் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தினரதண்ணீர் தொட்டியில் குளோரோஃபார்ம் சரியான அளவு கலந்து உள்ளார்களா என்று கிருஷ்ணராஜ் சோதனை மேற்கொண்டார்.பின்னர் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்த வீட்டிற்கு சென்று ஆய்வு செய்து குழந்தையின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி சென்றார்.லீடுகள் தோறும் துப்புரவு பணிகள் ஈடுபட்டு அதிகமான வீட்டில் டெங்கு புழுவை கண்டறிந்த சுகாதார பணியாளருக்கு சுகாதார துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் ரூபாய் 500 வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்