Home செய்திகள் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பு,

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பு,

by mohan

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதிக்கு வருகை தந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர்ஜான்பாண்டியனுக்கு இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே கட்சித் தொண்டர்கள் வரவேற்ப்பு அளித்தனர் இதைத்தொடர்ந்து இராஜபாளையம் தனியார் தங்கும் விடுதியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஜான்பாண்டியன் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட முயற்சி செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அரசாணை வெளியிட்ட பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் தங்களுடைய நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்ஒரு அரசு விழாவில் இந்திரன் நரேந்திரன் என எங்கள் சமுதாயத்தை இணைத்து பேசிய பாரத பிரதமருக்கு நாங்கள் உயிருள்ளவரை நன்றிக்கடன் பட்டு இருப்போம் என கூறினார்புதிய தமிழர் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தேவேந்திரகுல அரசாணை வெளியிட நாங்கள்தான் காரணம் என கூறியுள்ளது குறித்து உங்களுடைய கருத்து என கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த ஜான்பாண்டியன்கிருஷ்ணசாமி படித்த முட்டாள் இந்த சமுதாயம் பட்டியல் இனத்தில் வெளியேற கடந்த 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம் ஆனால் அவரை 25 ஆண்டுகள் போராட்டம் என தனக்காகு தானே பாராட்டு கூட்டம் நடத்தியவர் இவர் இந்த மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார் இவர் எப்போது பார்த்தாலும் தேவேந்திரன் என தன்னை சொல்லிக் கொள்ளாமல் தேவேந்திரன் அவர்கள் இவர்கள் எனக் கூறிக் கொள்கிறார் இவர் முதலில் தேவேந்திரகுல சமூகத்தைச் சேர்ந்தவர, 234 தொகுதி தனித்துப் போட்டியிடுவதாக தெரிவிக்கிறார் இவர் தனித்து போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க முடியாது விமர்சனம் செய்தார்திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக மக்களை வஞ்சித்து விட்டார் குறிப்பாக இந்துக்களை மிகவும் இழிவாகப் பேசிவிட்டு தற்போது இந்துக்கள் ஓட்டு வாங்குவதற்காக கையில் வேலை எடுத்துள்ளார் மக்கள் விழிப்புடன் இருக்கின்றனர் இந்துக்கள் இனி உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் மேலும் இந்துக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு இந்துக்களை இழிவாக பேசியவர்கள் ஓட்டு கேட்டு வரும்போது விரட்டியடிக்க வேண்டும் இந்துக்கள் அமைதியாக இருப்பதை பலர் பயன்படுத்திக் கொள்கின்றனர் சாது மிரண்டால் காடு கொள்ளாது வருகிற சட்டசபை தேர்தலில் இதன் வெளிப்பாடு தெரியும் என கூறினார்மேலும் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் அமைச்சரவையில் அங்கம் வகித்த வ திமுகவிற்கு அப்பொழுது மதவாத கட்சி என்று தெரியவில்லை என கேள்வி எழுப்பினார்சசிகலா அதிமுக கூட்டணி இடையே அதிமுக கட்சியை இடையே உள்ள கருத்து வேறுபாடு குறித்து கேள்வி எழுப்பியதற்க்குஅவர் வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் நான் ஏற்கெனவே சென்னேன் ரஜினிகாந்த் வரும்பொழுது பார்போம் என்று உறுதியாக நான் மட்டுமே சொல்லி கொண்டிருந்தேன் அவர் அரசியலுக்கு வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று அதே போல் தான் சசிகலா வரும்போது பார்த்துக் கொள்ளலாம்அதிமுகவுடன் சசிகலாவிடம் கூட்டணி வைக்கலாம் அரசியலில் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானலும் நடக்கலாம் ஜனநாயக நாட்டில் யார் எங்கு வேண்டுமானா போட்டியிடலாம் சசிகலாவும் போட்டியிடுவதற்கு எந்த தடையும் இல்லை என கூறினார்.உதயநிதி ஸ்டாலின் செல்லுமிடங்களில் பெண்களை இழிவாக பேசுவது உறுதி கேட்டதற்கு இது அவருடைய குடும்ப சொத்து என கூறினார்

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com