எரிந்த நிலையில் ஓடிய கார் .போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் சாதுரியமாக செயல்பட்டால் பெரும் விபத்து தவிர்ப்பு.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை சேர்ந்த பாண்டி இவர் தனது டாடா இன்டிகா காரில் சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி சென்று விட்டு மீண்டும் ஒத்த கடைக்கு செல்வதற்காக மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே வந்த பொழுது காரி பேட்டரி திடீரென வெடித்தது அப்பொழுது முன்பக்கம் புகைப்படத்துடன் கார் எஞ்சினில் இருந்து தீப்பற்றியது அச்சமடைந்த பாண்டி மற்றும் உடன் வந்தவர் வண்டியை நிறுத்த முயற்சித்தார் எனினும் வாகனம் நிறுத்த முடியவில்லை நிற்காமல் சென்று கொண்டிருந்தது பாண்டி அவரும் நண்பரும் வாகனத்தில் இருந்து இறங்கி தப்பினர் எனினும் கார் ஓடிக்கொண்டு இருந்தது அப்போது போக்குவரத்து பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் வீரக்குமார் சாமர்த்தியமாக செயல்பட்டு அருகே இருந்த ஒரு பெரிய பாராங்கல்லை கார் டயர் அடியில் வைத்தார் வாகனம் நடு சாலையில் நின்றது உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை டவுன் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியான பெரியார் பேருந்து நிலையத்தில் கார் தீப்பற்றி எரிந்த நிலையில் ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்