ஸ்டாலினிடம் மனு கொடுத்தால் 100 நாளில் ஸ்டாலினால் கச்சத்தீவை மீட்க முடியுமா என மதுரையில் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கேள்வி.

மதுரை செல்லூர் பகுதியில் வடக்கு சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து 1 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட 5 புதிய சாலைகளை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி.வி ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார், நிகழ்வில் ஆட்சியர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் விசாகன் பங்கேற்றனர், பின்னர் விழா மேடையில் வி.வி.ராஜன் செல்லப்பா கூறுகையில் “எம்.பி கனிமொழி மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் சாலைகள் போடவில்லை என பேசி உள்ளார், எந்த சாலை போடவில்லை என கூறவில்லை, யாரோ எழுதி கொடுத்ததை எம்.பி கனிமொழி பேசி வருகிறார், மக்கள குறைகளை தீர்க்க ஸ்டாலின் 100 நாட்கள் கேட்கிறார், அதிமுக ஆட்சியில் 1 நாளில் மக்களின் குறைகளை தீர்த்து வைக்கப்படுகின்றன, ஸ்டாலினிடம் மனு கொடுத்தால் 100 நாளில் ஸ்டாலினால் கச்சத்தீவை மீட்க முடியுமா?, திமுக ஆட்சியில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது, முதல்வரின் திட்டங்களை மக்கள் வரவேற்று வருகிறார்கள், தமிழக அரசின் சாதனை திட்டங்களை திமுக தடுக்க நினைக்கிறது, விவசாய கடன்கள் விவசாயிகள் நலன் கருதியே தள்ளுபடி செய்யப்பட்டது, விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதில் அதிமுகவினர் பயன்பெறவில்லை விவசாய கடன்கள் தள்ளுபடியில் யார் யார் பயன்பெற்று உள்ளார்கள் என்கிற பட்டியலை முதல்வர் வெளியீடுவார்” என பேசினார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்