Home செய்திகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஓய்வூதியர் சங்க கூட்டம்; ரூ 4 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்க தீர்மானம்..

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஓய்வூதியர் சங்க கூட்டம்; ரூ 4 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்க தீர்மானம்..

by mohan

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் மாவட்ட தலைவர் கருப்பையா தலைமையில் நடந்தது. மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பங்களாச்சுரண்டை துரை டேனியேல் சங்க திட்ட அறிக்கை வழங்கினார். மாவட்ட பொருளாளர் தெய்வகுமார் நிதி அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட துணை தலைவர் ராஜ் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். மாநில துணைத் தலைவர் சுந்தர மூர்த்தி நாயனார் சிறப்புரையாற்றினார். மாவட்ட துணை தலைவர் அருணாசலம், சுரண்டை அறிவியல் பூங்கா பொது நல மன்றம் ஆறுமுகம், வாழ்த்தி பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் மோகன் நன்றி கூறினார். கூட்டத்தில் அனைத்து ஊராட்சி தணிக்கைகளை தல நிதி தணிக்கை துறை மூலம் மேற்கொள்வதைத் தவிர்த்து, ஊராட்சிகணக்குகள் தணிக்கைக்காக பிரேத்தியேகமாக நமது துறையிலேயே ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் தணிக்கை பணிகளை மேற்கொள்ள அரசினை வலியுறுத்துவது. கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றிற்கு ரூ 350 ஓய்வூதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு 4 ஆண்டு கால இடைவெளிக்கு மருத்துவ காப்பீட்டுத் தொகையாக ரூ 4 லட்சம் அனுமதிக்கப்படுகிறது ஆனால் தல நிதி கணக்கு மற்றும் தணிக்கை துறை மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ 150/- மட்டும் பிடித்தம் செய்யப்பட்டு 4 ஆண்டு கால இடைவெளிக்கு ரூ 1 லட்சம் மட்டுமே அனுமதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. எனவே கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு போல் ஸ்தல நிதியில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ 350 /- பிடித்தம் செய்யப்பட்டு 4 ஆண்டு கால இடைவெளிக்கு மருத்துவ காப்பீட்டுத் தொகை ரூ 4 லட்சம் அனுமதிக்க அரசினை கேட்டுக் கொள்வது. தென்காசி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட மாநில அரசை கேட்டும், திருநெல்வேலி தென்காசி 4 வழி சாலை பணியை உடனடியாகத் துவக்கி முடிக்க மாநில அரசை வலியுறுத்தியும், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்கப்பட மாநில அரசை கேட்டுக்கொள்வது, தென்காசி மாவட்டத்தில் ரயில்வே வழித்தடத்தில் தேவையான இடங்களில் மேம்பாலம் அமைத்திட ரயில்வே நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்வது, தமிழ்நாட்டில் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மாநில நிதிக்குழு மானியத்தை தாமதமின்றி அனுப்பி வைத்திட அரசை கேட்டுக்கொள்வது, லஞ்சம் மற்றும் கண்காணிப்பு துறை மூலம் நடவடிக்கைக்குட்பட்ட ஓய்வு பெற்ற மற்றும் பணியில் இருக்கும் ஊழியர்கள் மீதான வழக்குகளை விரைந்து முடித்திட துரித நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறையினைக் கேட்டுக்கொள்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்தி

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com