மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல சிலையை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திரு உருவ வெண்கலச் சிலை சிம்மக்கல் ரவுண்டானா பகுதியில் அமைக்தப்படுகிறது. வெண்கல சிலையை பிப்., 17ல் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.பின்னர் ஒத்தக்கடையில் நடைபெறும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களாக பெறுகிறார்.இந்த கூட்டத்திற்கு வரும் திமுக தலைவர் மு.க, ஸ்டாலினை வரவேற்பது மற்றும் அது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மதுரையை அடுத்த அய்யர்பங்களாவில் நடைபெற்றது. புறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் பி.மூர்த்தி எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேசினார். மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர்கள் வெங்கடேசன், சேகர் மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், பொதுக்குழு தனம், மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் நேரு பாண்டியன்,இளைஞரணி ஜி.பி.ராஜா, மகளிரணி ரேணுகா ஈஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்,கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் அ பா. ரகுபதி, பொதும்பு தனசேகரன், சிறைச் செல்வன், பகுதி செயலாளர்கள் பொம்மதேவன், சசிகுமார், வக்கீல் கலாநிதி, வாடிப்பட்டி பேரூராட்சி பிரகாஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் அயூப் கான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்