மதுரை காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற பெண்காவலர்கள் சந்திப்பு மதுரையில் நடந்தது…

தமிழகமெங்கும் பணியாற்றும்மதுரை காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற பெண்காவலர்கள் சந்திப்பு மதுரையில் நடந்தது…மதுரை தமிழகமெங்கும் பணியாற்றும் மதுரை காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற பெண் காவலர்களின் சந்திப்பு மதுரையில் நடந்தது மதுரை காவலர் பயிற்சிப் பள்ளியில் 1997-ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற இரண்டாம் பேட்ச்பெண் காவலர்கள் தமிழகமெங்கும் காவல் நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர் .அவர்களில் சிலர் ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் ஆகவும் தலைமை காவலர்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர் .இவ்வாறு பயிற்சி பெற்ற பெண் காவலர்கள் மதுரையில் பரவையிலுள்ள ஒரு மண்டபத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினர். இதில் 220 பெண் காவலர்கள் கலந்து கொண்டனர் .இவர்கள்காவலர்களாக பணியில் சேர்ந்து ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் தலைமை காவலர்கள் ,உயர் பதவிக்கு காத்திருக்கும் காவலர்களாக உள்ளனர். இவர்களில் பதவி உயர்வு பெற்றவர்கள் இன்ஸ்பெக்டர்கள் எஸ்தர், பூமா ,சப்-இன்ஸ்பெக்டர்கள் சித்திரைச் செல்வி, சுப்புலட்சுமி ,ராஜேஸ்வரி, தலைமை காவலர்கள் கலாவதி, அழகுவேல் வள்ளி, சுஜாதா ,சுதாராணி ஆகியோர் அடங்குவர் .மேலும் பலர் பதவி உயர்வுக்காகஇருக்கின்றனர். இவர்கள் பயிற்சி பெற்ற காலத்தில் இருந்து பணியில் இருந்து வரும் காலங்கள் வரை தங்களின் அனுபவங்கள்,நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர் .இந்த சந்திப்பில்220 பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்