Home செய்திகள் சி.வி.சண்முகம் மற்றும் சசிகலா பற்றி பேசிய பேச்சு குறித்த கேள்விக்கு என்னிடம் ஏதாவது கேட்க வேண்டியது இருந்தால் கேளுங்கள் என ஆதங்கப்பட்டார் அமைச்சர் செல்லூர் ராஜு.

சி.வி.சண்முகம் மற்றும் சசிகலா பற்றி பேசிய பேச்சு குறித்த கேள்விக்கு என்னிடம் ஏதாவது கேட்க வேண்டியது இருந்தால் கேளுங்கள் என ஆதங்கப்பட்டார் அமைச்சர் செல்லூர் ராஜு.

by mohan

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் 119 வது பிறந்த நாள் விழாவை முன்னட்டு சாத்தமங்கலத்தில் உள்ள தேவநேய பாவாணர் மணிமண்டபத்தில் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, ஸ்டாலின் ஏதேதோ பேசி வருகிறார் மேடைக்காக மட்டுமே ஸ்டாலின் பேசி வருகிறார் அது அவருடைய வழக்கமான ஒன்று .முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே வரலாற்றுச் சாதனைகளை எடப்பாடி செய்து வருகிறார். தேர்தல் அறிக்கையில் மட்டுமே அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு திட்டங்களை கொண்டு வருவதாகச் சொன்னார்கள் ஆனால் மக்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்தையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் .தொல் திருமாவளவன் தற்சமயம் தள்ளுபடி செய்துள்ள கடன்களுக்கு வரவேற்பு தந்துள்ளார். மகிழ்ச்சி அதேசமயம் தாட்கோ கடன் சில வழிமுறைகள் என்பது இருந்துகொண்டு இருக்கிறது. தனது அந்த வழிமுறைகளை பின்பற்றி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுப்பார். வழக்குகளை கண்டு நாங்கள் அஞ்சுபவர்கள் இல்லை கனிமொழி உட்பட பல திமுகவினர் சிறைச்சாலையில் இருந்தவர்கள் 20 ஆண்டுகளில் மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள் என்பதை மட்டுமே மு க ஸ்டாலின் சொல்லட்டும். துர்க்காவே சொல்லியுள்ளார் தலைவர் மு க ஸ்டாலின் பெருமாளை விரும்புவார் என்று சொல்லியுள்ளார் இரவு நேரங்களில் ஸ்டாலின் கோயிலுக்குச் செல்வார் போல இலவு காத்த கிளி போல ஸ்டாலின் இருந்துள்ளார் புகார் சொல்ல வேண்டுமென்றால் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சொல்ல வேண்டும் இவர் ஊர் ஊராகச் சென்று கொண்டிருக்கிறார். மக்கள் மு க ஸ்டாலினிடம் கொடுக்கக்கூடிய மனுக்களை பிரித்து உரிய துறைகளுக்கு அனுப்புவதற்கு ஒரு மாதங்கள் ஆகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை வடக்கு வெளி வீதி பகுதியில் தலைவர் கலைஞர் சிலை வைப்பதற்கு நானே அனுமதி அளித்து விட்டோம் திமுகவினரை போல கூறுகிய எண்ணம் படைத்தவர்கள் நாங்கள் அல்ல. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை வடக்கு வெளி வீதி பகுதியில் கலைஞர் சிலை வைப்பதற்கு அனுமதி அளித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் தமிழக ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்லி வருகிறார் நிலைமை இப்படியிருக்க தேமுதிக பேசுவதில் என்ன தவறு என்றும் எதிர்க்கட்சி வரிசையில் அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள் அதனால் அவர்கள் பேசியதில் தவறில்லை, கனிமொழி நாளை மேற்கு தொகுதியில் வரவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது மக்களிடம் கேட்கட்டும் அமைச்சர் என்ன செய்தார் என்று எத்தனை கோடி ரூபாய் திட்டத்தில் நாங்கள் குடிநீர் போன்ற பல்வேறு வசதிகள் செய்து வந்துள்ளோம் என்று மக்களே சொல்வார்கள் இதை முன்னாலே அவர் செய்து இருக்க வேண்டும் தேர்தல் நேரத்தில் வந்து என்ன செய்வது மக்களை திசை திருப்பும் முயற்சி இது என தெரிவித்தார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com