
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு மாடக்குளம் பிரதான சாலையில் குடியிருப்பு நிறைந்த பகுதியான முட்புதரில் திடீரென தீப்பிடித்தது தீயானது சுமார் 2 கிலோ மீட்டர் வரை தெரியவந்தது இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைக்கப் பட்டது குடியிருப்பு நிறைந்த பகுதியில் தீ எரிந்தது அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது எனினும் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என குறிப்பிடத்தக்கது. மேலும் மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் தீயணைப்பு வாகனம் வருவதற்கு சற்று சிரமம் ஏற்பட்டது எனினும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் அடிக்கும் 4 பைப்புகளை இணைப்புகள் கொடுத்து சாலையின் ஓரத்தில் நிறுத்தி தீயை அணைத்தனர் மின்வாரிய அதிகாரிகள் மின் வயர்களை தாழ்வாக இருக்கும் உயர் மின்னழுத்த வயர்களை மேலே உயர்த்தி அவசர காலத்திற்கு வாகனம் உள்ளே செல்லும் வகையில் வழி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.