
மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் முதன் முறையாக ஒரு ஆரோக்கியமான நன்கொடையாளரிடமிருந்து (Living Donor) கல்லீரலின் ஒரு பகுதியை நன்கொடையாக பெறப்பட்டு பாதிக்கப்பட்ட நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. அதாவது மனித கல்லீரலில் வலது மற்றும் இடது என இரு மடல்கள் உள்ளன. வலது மடல் நன்கொடையாளரிடமிருந்து அகற்றப்பட்டு பெறுநருக்கு இடமாற்றம் செய்யப்படுவதே இந்த வாழும் நன்கொடையாளர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையாகும். முன்னதாக, இதே குழு குழந்தை பெறுநர்களுக்கு வாழும் நன்கொடையாளர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தது.நீண்டகால மதுப்பழக்கத்தின் காரணமாக திருச்சியைச் சேர்ந்த 35 வயது நிரம்பிய இளைஞருக்கு கல்லீரல் மிகவும் பாதிப்படைந்து இருந்தது. இதனை தொடர்ந்து மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனைக்கு அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் கல்லீரல் சிகிச்சை நிபுணர்களால் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது எதிர்காலத்தையும் அவரது இளம் வயதையும் கருத்தில் கொண்டு அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது. 53 வயதான அவரது தாயார் தனது மகனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்ய தயாராக இருந்தார். அறுவை சிகிச்சை நிபுணர்களால் பல சோதனைகளுக்கு பிறகு அவர் கல்லீரல் நன்கொடைக்கு பொருத்தமானவர் என்று கண்டறியப்பட்டது.டாக்டர். மனீஷ் வர்மா, டாக்டர். மதுசூதனன் ஜே, டாக்டர். ஆனந்த் ராமமூர்த்தி, டாக்டர் .மஞ்சுநாத் மற்றும் பலர் அடங்கிய மருத்துவர்கள் குழுவால் சுமார் 15 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. டாக்டர்.ராஜேஷ் பிரபு, டாக்டர். பத்மா பிரகாஷ், டாக்டர்.கணேஷ் மற்றும் டாக்டர். ஜான் ராபர்ட் ஆகியோர் உள்ளிட்ட மற்றொரு மருத்துவர்கள் குழு, அறுவை சிகிச்சைக்குப் பிந்தய மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டனர். இந்த மாற்று அறுவை சிகிச்சை தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் (CMCHIS) கீழ் செய்யப்படுகிறது அரசாங்கத்தின் ஆதரவுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம் “என்று மதுரை அப்பல்லோ ஸ்பெசிலிட்டி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரோகிணி ஸ்ரீதர் கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.