Home செய்திகள் சென்னசமுத்திரம் ஸ்ரீகிருஷ்ணா் கோயில் 7ம் ஆண்டு வருஷாபிஷேக விழா.

சென்னசமுத்திரம் ஸ்ரீகிருஷ்ணா் கோயில் 7ம் ஆண்டு வருஷாபிஷேக விழா.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணா் கோயிலில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. சென்னசமுத்திரம் ஸ்ரீகிருஷ்ணா் கோயில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதன் தொடா்ச்சியாக ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் நடைபெற்ற தினத்தன்று வருடாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 7-ஆம் ஆண்டு வருடாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலில் சிறப்பு யாகம், பூஜை நடத்தப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதைத் தொடா்ந்து சுவாமிக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக இரவில் கின்னஸ் புகழ் லக்ஷ்மன் ஸ்ருதி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து கிராமப்புற மாணவா்களின் பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றன.சென்னசமுத்திரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 2019-20 ஆண்டில் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் முதல் பரிசு எம்.திவ்யதர்ஷினி, இரண்டாம் பரிசு அபிதா, மூன்றாம் பரிசு எம்.மகாலட்சுமி ஆகியோர்களுக்கு அமரர் முனியம்மாள் ராமசாமி நினைவாக பணமுடிப்பு மற்றும் நினைவு பரிசு தமிழ்நாடு டிவிஎஸ் தொழிற்சங்கத் தலைவா் குப்புசாமி வழங்கி பாராட்டினார். ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா , பள்ளி தலைமையாசிரியர் அபூபக்கர் ஆசிரியர்கள் உமா, லலிதா மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ராஜி, எல்ஐசி பாரதி, ஆசை முஷிர் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து முக்கிய பிரமுகா்கள், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு டிவிஎஸ் தொழிற்சங்கத் தலைவா் குப்புசாமி மற்றும் விழாக் குழுவினா், ஊா் முக்கியஸ்தா்கள் செய்திருந்தனா்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com