இன்னைக்கு அரசியல் வாதியாக இல்லாமல் ஆளுநராக வந்துள்ளேன்-தமிழிசை

எல்லாத்தையும் சிறப்பு இங்க எதிர்பாராதவிதமாக விமான நிலையத்தில் நான் வந்தடைந்த பொழுது தமிழக முதலமைச்சர் இங்கே வருகிறார்கள் என்று கேள்விப்பட்டு நான் அவரை சந்தித்தேன். மதுரைக்கு வந்து இருப்பதன் நோக்கம் மதுரை வழியாக பழனிக்கு போறேன் பழனி மலை சுப்ரமணிய சாமியை பார்க்க போறேன்.கடவுள் பழனிச்சாமியை பார்ப்பதற்கு மதுரை வந்தடைந்த போது முதல்வர் பழனிசாமி பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.இறைவன் பழனிச்சாமிக்கு தைப்பூசத்திற்கு விடுமுறை கொடுத்ததற்காக முதல்வர் பழனிசாமி நன்றி சொன்னேன்.தைபூச விழாவிற்கு நீண்ட நாள் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. அதனால தமிழகத்தில் எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும் .கொரான தொற்று முழுசுமாக போய் எல்லாரும் தடுப்பூசி பெற்று அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்து அதற்காகத்தான் பழனி முருகனை சென்று வழிபட இருக்கிறேன். மீனாட்சி அம்மனை பார்த்துவிட்டு பழனி முருகனை தரிசிப்பதற்காக செல்கிறேன்.வந்திருக்கிற அனைவரும் நலமாக இருக்க வேண்டும் பத்திரிகை சகோதர்களுக்கு எப்பொழுது போல் எனது அன்பு வாழ்க்கள் என தெலுங்கான ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்