இ பீட் செயலி மற்றும் காவல்ரோந்துப் பணியை மிகவும் பயனுள்ளதாக்கும் வகையில் மாநகர காவல் ஆணையாளர் துவக்கிவைத்தார்.

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 72வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல்துறை ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்கா பட்டா புக்என்னும் முறையை இ பீட் செயலியின் மூலம் கண்காணிக்கும் வகையில் புதிய செயலி மற்றும் புதிதாக நவீன மயமாக்கப்பட்ட வடிவமைக்கப்பட்ட காவல்துறை ரோந்து வாகனங்களை துவக்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகர காவல்துறை ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்கா,தேனீர் கடைகள் பெட்டி கடைகள் சிறிய அளவிலான கடைகள் உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் கண்கானிப்பிற்காக ஒவ்வொரு கடைகளிலும் என்ற குறிப்பேடு வைக்கப்பட்டு காவல்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.மேலும் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப நவீனமயமாக்கும் வகையில் காவலர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் காதலர்களை கண்காணிக்கும் வகையிலும் இ-பீட் என்ற செயலி உருவாக்கப்பட்டு அதன் மூலம் QR கோடு மூலம் நேரடியாக காவல்துறைகட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.அதன்படிகாவலர்கள் செல்லும் அனைத்து இடங்களிலும் கியூ ஆர் கோட் அச்சிடப்பட்ட படிவங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த கியூஆர் குறியீட்டை எந்த காவல்துறையினர் ஸ்கேன் செய்தார்கள் என்பதற்கான நிகழ்நேர தகவல்களை வழங்கவும், காவல்துறைஅதிகாரிகள் போலீஸ் கான்ஸ்டபிள்களால் ரோந்து செல்வதை கண்காணிக்க முடியும், இது பயனுள்ள முறையாக அமையும்..இந்த புத்தகங்களை QR குறியீடுகளுடன் மாற்றுவதால் கண்காணிப்பு எளிதாகிறது.இதன் வீதிகளில் போலிஸ் தெரிவுநிலையை திறம்பட அதிகரிக்க வழிவகுக்கிறது.வழக்கமான வருகையை உறுதிப்படுத்த அதே அமைப்பு பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்குற்றவியல் இயக்கங்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சேகரிப்பதே முக்கிய நோக்கம் என்றும் கூறினார்.நகர காவல்துறை ரோந்து செல்லும் வாகனங்கள் சிறப்பாகவும், அதை அதிகரிக்கவும்15 நான்கு சக்கர ரோந்து வாகனங்களில் புதிய ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டு புதிதாக வடிவமைக்கப்பட்ட போலிஸ் ஸ்டிக்கர்களுடன் ஒட்டப்பட்டு 27 இரு சக்கர ரோந்து வாகனங்களும் ஒளிரும் விளக்குகள் மூலம் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள் ளது. போலீஸ் கமிஷனர் ரோந்து வாகனங்களை ஆய்வு செய்து துவக்கிவைத்தார்.இந்நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் சிவபிரசாத் போக்குவரத்து துணை ஆணையர் சுகுமாரன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்