Home செய்திகள் அம்மா அரசு கூட்டுறவு துறையில் தமிழக விவசாயிகளுக்கு ரூபாய் 59 ஆயிரம் கோடி வட்டி இல்லா கடன் உதவி அமைச்சர் செல்லூர் கே ராஜூ பெருமிதம்.

அம்மா அரசு கூட்டுறவு துறையில் தமிழக விவசாயிகளுக்கு ரூபாய் 59 ஆயிரம் கோடி வட்டி இல்லா கடன் உதவி அமைச்சர் செல்லூர் கே ராஜூ பெருமிதம்.

by mohan

தமிழகத்தில் 1.78 ஆயிரம் விவசாயிகளுக்கு கூட்டுறவு துறை வங்கி மூலம் ரூபாய் 59 ஆயிரம் கோடி வட்டியில்லா கடனுதவி அம்மா அரசு வழங்கியுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ பேசினார். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி திருப்பரங்குன்றம் யூனியன் கீழமாத்தூர் ஊராட்சியில் கூடுதலாக ரூபாய் 15 லட்சம் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமிபூஜை அமைச்சர் செல்லூர் கே ராஜூ துவக்கி வைத்து பேசியதாவது கீழமாத்தூர் 20 கிராம மக்கள் உடல்நலம் பயன்பெறும் வகையில் 60 லட்சம் ரூபாய் நிதியில் ஆரம்ப சுகாதார நிலையம், இப்பகுதியில் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க ரூபாய் 45 லட்சம் நிதியில் திட்டப் பணி நடக்கிறது மேலும் 1.60 லட்சத்தில் குடிநீர் திட்ட பணி ரூபாய் 17.50லட்சம் நிதியில் விரிவாக்க கிரீன் கார்டன் பகுதியில் புதிய ரோடு அமைக்கப்பட்டுள்ளது இதுவரை 1.58 கோடியில் பாலம் சாலை பேவர் பிளாக் தெரு அமைத்தல் திட்ட பணி நிறைவு பெற்றுள்ளது. காலணி முதல் வைகை ஆற்றின் கரை வரை ரூபாய் 4.60 லட்சம் நிதியில் பேவர் பிளாக் பதிக்கும் பணி நிறைவு மேலமாத்தூர் இல் ரூபாய் 5 லட்சத்தில் குடிநீர் திட்ட பணி நிறைவு ரூபாய் 5 லட்சத்தில் நிழற்குட அமைக்கும் பணி 38 குடும்பங்களுக்கு ரூபாய் 1.50 லட்சம் திட்டத்தில் வீடுகள் பணி வழங்கப்பட்டது கீழமாத்தூர் ரூபாய் 52 ஆயிரத்து மின்விளக்குகள் கூடுதலாக இப்பகுதி கிராமங்கள் வளர்ச்சிக்காக ரூபாய் 6.18 கோடி பணிகள் நிறைவு பெற்றுள்ளன அம்மா ஆட்சியில் சிறு குறு கிராமங்கள் வரை வளர்ச்சித் திட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளன திமுக ஆட்சி காலத்தில் கிராம மக்களின் மேம்பாடு அடைய பணிகள் செய்யவில்லை திமுக தலைவர்கள் குடும்பங்கள்தான் கோடிக்கணக்கில் ஊழல் செய்து வளர்ந்து உள்ளனர், தமிழக மக்களுக்காக எதுவும் செய்யவில்லை ஆனால் அம்மாவின் அரசு கிராமங்களை தேடிச்சென்று

தாய்ப்பறவை இறைக்காக காத்திருக்கும் குஞ்சுகளை தேடி செல்வது போல் அதிமுக அம்மா அரசு தமிழக மக்களின் அடிப்படை வசதி கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது என்பது உண்மையாகும்,இதுவரை நான் வகித்த கூட்டுறவுத்துறை மூலம் 1.78 ஆயிரம் தமிழக விவசாயிகளுக்கு ரூபாய் 59 ஆயிரம் கோடி வட்டியில்லா கடனுதவி வழங்கி உள்ளோம், கீழமாத்தூரில் கூடுதலாக 60 லட்சம் லிட்டர் குடிநீர் மேல்நிலை தொட்டி அமைந்து உள்ளது மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் ரூபாய் 15 லட்சம் நிதியில் பூமி பூஜை நடந்து உள்ளது இது போல் எண்ணற்ற திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அம்மாஅரசு இன்னும் பல பணிகளை தமிழக மக்களுக்காக செய்கிறது எங்களது எஜமானர்களான நீங்கள் தொகுதி மக்கள் மறவாது மீண்டும் அம்மா ஆட்சி தொடர இரட்டை இலைக்கு ஆதரவு தர வேண்டுகிறேன் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார், இந்நிகழ்ச்சியில் கீழமாத்தூர் ஊராட்சி தலைவர் ராஜாத்தி துரைப்பாண்டி தலைமை வகித்தார் பரவை பேரூராட்சி முன்னாள் சேர்மன் பரவை ராஜா, வில்லாபுரம் ராஜா, ஊராட்சி தலைவர்கள் கந்தசாமி அபிராமி மணிகண்டன் கிளைச் செயலாளர் சாகுல் மைதீன் அஜ்மீர் தங்கராஜ் சண்முகநாதன் கருப்பணன் கூட்டுறவு துறை வங்கி தலைவர் முத்தையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com