அரசின் திட்டங்களை புறக்கணிப்பதாக கூறி குடும்ப அட்டைகளை ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் வீசி சென்ற கிராமத்தினர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட நிலையில் – கம்பிக்குடி கால்வாய் திட்டத்தின் கீழ் கொம்பாடி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட கீழகண்மாய், மேலகண்மாய், நெடுமதுரை ஆகிய கிளை கால்வாய்கள் வழியாக குடிநீர் மற்றும் விவசாய தேவைக்களுக்காக தண்ணீர் திறக்க கோரி கொம்பாடி கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்காணோர் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்த கோரிக்கை மனு அளித்தனர்.இந்நிலையில் அதிகாரிகள் தலைமையிலான பேச்சுவார்த்தைக்கு பின் நேற்றைய தினம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கொம்பாடி கிராமத்திற்கு தண்ணீர் திறக்க கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பிய நிலையில் இன்று அந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து கொம்பாடி கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து அரசின் திட்டங்களை புறக்கணிக்கும் வகையிலும், 2021சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாகவும் கூறி 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளை சாலையில் வீசி எறிந்து அதனை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர். இந்த போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கிராமத்தினர் :ஆளும் கட்சியினரின் தூண்டுதலின் பெயரில் தங்களது கிராமத்திற்கு தண்ணீர் திறக்க மறுப்பதாகவும் மாவட்ட ஆட்சியரின் செயல்பாடு குழப்பத்தை ஏற்படுத்துவதால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதோடு குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைத்து அரசின் திட்டங்களை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்