ஞானவேல் காலனியில் பூட்டியிருந்த வீட்டில் நகை பணம் கொள்ளை.

மதுரை தெப்பக்குளம் அருகே தெப்பக்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட விரிவாக்க பகுதியான ஞானவேல் பகுதியில் வசித்து வருபவர வசித்து வருபவர் செல்வ பாண்டி.இவர் மிட்டாய் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார், பொங்கல் பண்டிகையையொட்டி உறவினர் வீட்டிற்கு சென்னைக்கு சென்றிருந்தார்.இன்று அதிகாலை சென்னையிலிருந்து மதுரைக்கு வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது வீடு கதவு திறந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து இருப்பதையும் அதில் இருந்த 8 பவுன் நகை பத்தாயிரம் பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து செல்வபாண்டி தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றப்பிரிவு டிசி பழனி குமார் தலைமையில் காவல்துறையினர் தடயங்களை சேகரித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்