இராஜபாளையம் பகுதியில் 32-வது சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் பொதுமக்களுக்கு அறிவுரை.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் 32வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாக சங்கர் மற்றும் ஆர்டிஓ ஜாஸ்மின் மெர்சி கமலா மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை வீரன் அடங்கிய குழுக்கள் இராஜபாளையம் பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் சேதம், வேகத்தடை அமைப்பது குறித்து இன்று 28 பகுதிகளில் ஆய்வு செய்தனர். பின் தென்காசி ரோடு காந்தி கலை மன்றம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாகனத்தில் பயணம் செய்யும் போது ஹெல்மெட் சீட் பெல்ட் அணிவது மற்றும் மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்குவது குறித்து அறிவுரை வழங்கி விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர். நிகழ்ச்சியில் உடன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் லட்சுமணன் மற்றும் காவல் ஆய்வாளர் சங்கர் கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் வி காளமேகம்